யாழ் மாவட்ட மக்கள் ஒழுக்கத்தில் சிறந்தவர்கள் என யாழ் மாவட்ட படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் செனரத் பண்டார தெரிவித்துள்ளார்.
தற்போதைய யாழ் மாவட்ட நிலைமை தொடர்பில் கருத்துரைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்
நான்யாழ் மாவட்ட இராணுவ கட்டளைத்தளபதியாக யாழ்ப்பாணத்தில் கடமையினை பொறுப்பேற்று கடந்த மூன்று மாதங்கள் ஆகின்றன. நான் ஏனைய மாவட்டங்களிலும் ராணுவத்தில் கடமையாற்றியிருக்கின்றேன் ஏனைய மாவட்ட மக்களை விட யாழ்ப்பாணத்தை பொறுத்தவரை யாழ்ப்பாண மாவட்ட மக்கள் ஒழுக்கத்தில் சிறந்தவர்களாகவே நான் நேரடியாக பார்க்கின்றேன்.
குறிப்பாக தற்போதைய கொரோனா சூழ்நிலையில் சுகாதார நடைமுறைகளை பின்பற்றுமாறு கோரிக்கை விடுக்கின்ற போது அதனை பின்பற்றி சுகாதார விதிகளை சரியாக கடைப்பிடித்து வீடுகளில் இருக்கின்றார்கள் இதை நான் பெருமையாக கூறிக் கொள்ள விரும்புகின்றேன்.
அத்தோடு யாழ் மாவட்ட மக்கள் குறித்த சுகாதார நடைமுறையை தொடர்ச்சியாக பேணுவதன் மூலம் உலக நாடுகளை அச்சுறுத்தலுக்குள்ளாகியுள்ள கொரோனாவிலிருந்து எமது மாவட்டத்தினை காப்பாற்ற முடியும்.
சுகாதார பிரிவினரால் வெளியிடப்பட்டுள்ள சுகாதார நடை முறைகளை மக்கள் கடைப்பிடிப்பதனால்எமது மக்களையும் எமது பிரதேசத்தையும் காப்பாற்ற முடியும் .
எனவே யாழ்ப்பாண மக்கள் குறித்த சுகாதார நடைமுறையினை தற்போது நீங்கள் எவ்வாறு கடைப்பிடிக்கிறீர்களோ,அதனை தொடர்ச்சியாக பின்பற்றுவதன் மூலம் எமது பிரதேசம் கொரோனா தொற்றால் பாதிக்காத வண்ணம் பாதுகாத்துக் கொள்ள முடியும்
மேலும் தென்னிந்தியாவிலிருந்து வடபகுதிக்கு சட்டவிரோதமாக வருவோர் மற்றும் சட்டவிரோதமாக பொருட்களைக் கொண்டு வருவோர் தொடர்பிலும் யாழ்ப்பாண மாவட்டத்தின் கரையோரப் பகுதி மக்கள் மிகவும் அவதானமாக செயற்பட வேண்டும் என யாழ் மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி தெரிவித்தார்.
Post a Comment