கேப்டன் பதவியில் இருந்து விராட் கோலியை நீக்க வேண்டும் - முன்னாள் வீரர் வலியுறுத்தல் - Yarl Voice கேப்டன் பதவியில் இருந்து விராட் கோலியை நீக்க வேண்டும் - முன்னாள் வீரர் வலியுறுத்தல் - Yarl Voice

கேப்டன் பதவியில் இருந்து விராட் கோலியை நீக்க வேண்டும் - முன்னாள் வீரர் வலியுறுத்தல்


பெங்களூரு அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விராட் கோலியை நீக்க வேண்டும் என்று முன்னாள் வீரர் கூறியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரரும்இ ஐ.பி.எல். கிரிக்கெட்டில் கொல்கத்தா அணிக்காக 2 முறை கோப்பையை பெற்றுத் தந்தவருமான கவுதம் கம்பீர் இணையதளம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது::-
 
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் கேப்டனாக விராட் கோலி 8 ஆண்டுகள் பணியாற்றி விட்டார். ஆனால் இன்னும் ஒரு முறை கூட கோப்பையை வெல்லவில்லை. 8 ஆண்டு கேப்டன்ஷிப் என்பது ரொம்பவே அதிகம். பெங்களூரு அணி நிர்வாகம் கேப்டன்ஷிப்பை மாற்றுவதற்கு இதுவே சரியான தருணமாகும்.

 கோப்பையை வெல்லாமல் எந்த கேப்டனாவதுஇ எந்த வீரராவது ஒரே அணியில் இவ்வளவு காலம் நீடித்திருக்கிறார்களா? என்று சொல்லுங்கள் பார்ப்போம். எனவே இதற்கான பொறுப்பை கோலி தான் எடுத்துக் கொள்ள வேண்டும். விராட் கோலியுடன் எனக்கு எந்த பகைமையும் கிடையாது. பெங்களூரு அணியால் கோப்பையை வெல்ல முடியாததற்கு நானே பொறுப்பு என்று அவர் திறந்த மனதுடன் சொல்ல வேண்டும். நீங்கள் தான் கேப்டன். வெற்றியின் போது கிடைக்கும் பாராட்டுகளை ஏற்றுக்கொள்ளும் போதுஇ தோல்வியால் எழும் விமர்சனங்களையும் ஏற்றுக்கொண்டாக வேண்டும்.

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டனாக ஆர்.அஸ்வின் 2 ஆண்டுகள் இருந்தார். அவர் சோபிக்கவில்லை என்றதும் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். நாம் டோனி ரோகித் சர்மா குறித்து பேசுகிறோம். டோனி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 3 முறை கோப்பையை வென்று தந்திருக்கிறார். ரோகித் சர்மா மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 4 தடவை கோப்பையை கைப்பற்றி இருக்கிறார். 

அதனால் தான் அவர்கள் நீண்ட காலமாக அந்தெந்த அணிகளின் கேப்டன்களாக தொடருகிறார்கள். ரோகித் சர்மா 8 ஆண்டுகளில் சாதிக்கவில்லை என்றால் நிச்சயம் கழற்றி விட்டிருப்பார்கள். ஒவ்வொரு வீரருக்கும்இ ஒவ்வொரு வகையிலான அளவுகோல் இருக்கக்கூடாது. கேப்டனாக இருப்பவர் களத்தில் சாதகமான முடிவுகளை கொண்டு வர வேண்டும். அது தான் முக்கியம்.

'நாங்கள் பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றிருக்கிறோம். அதற்கு நாங்கள் தகுதியான அணி' என்று நீங்கள் (பெங்களூரு) சொல்லலாம். என்னை பொறுத்தவரை பெங்களூரு அணி பிளே-ஆப் சுற்றுக்கு ஒரு போதும் தகுதியான அணி கிடையாது.

 டிவில்லியர்ஸ் இந்த சீசனில் இல்லாமல் இருந்திருந்தால் பெங்களூரு அணியின் நிலைமை எப்படி இருந்திருக்கும் என்பதை கற்பனை செய்து பாருங்கள். லீக் சுற்றில் கிடைத்த 7 வெற்றிகளில் அவரது அபாரமான பங்களிப்பால் 2-3 வெற்றிகள் கிடைத்தது. இல்லாவிட்டால் வெளியேறியிருக்கும். கடந்த ஆண்டை போலவே இந்த சீசனிலும் ஒருங்கிணைந்த அணியாக அவர்கள் செயல்படவில்லை. இவ்வாறு கம்பீர் கூறினார்.

பெங்களூரு அணி இதுவரை 3 முறை இறுதிப்போட்டிக்கு வந்து தோற்றுள்ளதே தவிர ஒரு முறையும் கோப்பையை உச்சிமுகர்ந்ததில்லை. கடந்த ஆண்டில் கடைசி இடத்துக்கு தள்ளப்பட்டது நினைவுகூரத்தக்கது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post