யாழ்-கொழும்பு அத்தியாவசிய சேவையில் ஈடுபடுபவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் - அவசர கூட்டத்திற்கு வர்த்தக சங்கம் அழைப்பு - Yarl Voice யாழ்-கொழும்பு அத்தியாவசிய சேவையில் ஈடுபடுபவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் - அவசர கூட்டத்திற்கு வர்த்தக சங்கம் அழைப்பு - Yarl Voice

யாழ்-கொழும்பு அத்தியாவசிய சேவையில் ஈடுபடுபவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் - அவசர கூட்டத்திற்கு வர்த்தக சங்கம் அழைப்பு



கொரோனா அபாய நிலைமையில் யாழ்ப்பாணம் - கொழும்பு அத்தியாவசியப் பெருட்கள் சேவையில் ஈடுபடுகின்ற வர்த்தகர்கள், வாகன உரிமையாளர்கள், சாரதிகள், நடத்துனருக்கான நடைமுறைகள் கட்டப்பாடுகள் தொடர்பில் ஆராயும் விசேட கூட்டம் யாழ் வர்த்தக சங்க மாநாட்டு மண்டபத்தில் நாளை வெள்ளிக்கிழமை மாலை 3 மணிக்கு நடைபெறவுள்ளது.

எனவே அத்தியாவசியப் பொருட்கள் சேவையில் ஈடுபடுகின்ற வாகனங்களின் சாரதிகள் நடத்துனர்கள் உள்ளிட்டவர்களின் பெயர் விபரங்களுடன் வாகன உரிமையாளர்கள் அல்லது வர்த்தகர்கள் இந்தக் கூட்டத்திற்கு கட்டாயம் சமூகமளிக்க வேண்டுமென வர்த்தக சங்கத் தலைவர் ஆர்.nஐயசேகரம் கோரியுள்ளார்.

இந்தவிடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது..

நாட்டில் கொரோனா தாக்கம் அதிகரித்து வருகின்றதால் பல இடங்களிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டள்ளதுடன் பல கட்டுப்பாடுகள் நடைமுறைகள் என்பன விதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான நிலைமையில் கொரோனாவிலிருந்து பாதுகாக்கும் நடவடிக்கைகளை சுகாதாரப் பிரிவினர் ஈடுபட்டுள்ளனர்.

அதனடிப்படையில் யாழிலிருந்து கொழும்பிற்கும் கொழும்பிலிருந்து யாழிற்கும் அத்தியாவசிய பொருட்கள் சேவைகளில் ஈடுபட்டுள்ள மற்றும் பொதிகள் கொண்டு செல்கின்ற அல்லது கொண்டு வருகின்ற வாகனங்களின் உரிமையாளர்கள்சாரதிகள் மற்றும் நடத்துனர்களுக்கும் சுகாதாரப் பிரிவினர்களுக்கும் வர்த்தகர்களுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடலொன்று நடைபெறவுள்ளது.

ஆகையினால் இத்தகைய போக்குவரத்துச் சேவையில் ஈடுபட்டுள்ள அல்லது ஈடுபடுகின்ற வாகனங்களின் சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் அல்லது உதவியாளர்களின் பெயர் விபரங்களுடன் இந்தக் கூட்டத்திற்கு வாகன உரிமையாளர்கள் அல்லது வர்த்தகர்கள் கட்டயாம் சமூகமளிக்க வேண்டும்.

மேலும் போக்குவரத்திற்கு சில நடைமுறைகள் அல்லது கட்டுப்பாடுகள் குறித்து சுகாதாரப் பரிவினர் சாரதிகள் உதவியாளர்களுக்கு தெளிவுபடுத்த உள்ளனர். இவ்வாறான புதிய நடைமுறைகள் அமுல்ப்படுத்தப்பட இருப்பதால் அத்தியாவசிய சேவையில் ஈடுபடுகின்றவர்கள் இக் கூட்டத்தில் அவசியம் பங்குபெற வேண்டுமென்றும் கூறியுள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post