யாழ். வருவோரை ஆனையிறவு பூநகரியில் விபரத்தை சேகரித்து சுகாதார நடவடிக்கைக்கு உதவ கோரிக்கை...
யாழ்ப்பாணத்திற்குள் பிற மாகாணத்தில் இருந்து வருபவர்களை முழுமையாக இனம்கான முடியாத நிலமை கானப்படுவதனால் ஆனையிறவு மற்றும் சங்குப்பிட்டிகளில் படையினர் மூலம் பதிவுகளை மேற்கொண்டு சுகாதார திணைக்களத்திற்கு வழங்க ஆவண செய்யுமாறு மாகாண ஆளுநருக்கு யாழ்ப்பாணம் பொது சுகாதார வைத்திய அதிகாரி கடிதம் எழுதியுள்ளார்.
2020 நவம்பர் 25;ஆம் திகதியிடப்பட்ட கடிதம் மூலம் எழுத்தில் மேற்படி கோரிக்கை விடப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் இரு பாதைகள் ஊடாகவுமல வரும் உள்ளூர் வாசிகள் அன்றி வெளிமாகாணத்தவர்கள் அனைவரதும் பதிவுகள் பேனப்பட்டு உடனுக்குடன் சுகாதார திணைக்களத்திற்கு வழங்குவதன் மூலமே முழுமையாக கோவிட் 19னை கட்டுப்படுத்தும் செயலாக அமையும்.
இவ்வாறு சுகாதார வைத்திய அதிகாரியினால் எழுதப்பட்ட கடித்த்தின் பிரதிகள் மாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபர் மற்றும் இராணுவத் தளபதி ஆகியோருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்தக் கடிதம் அனுப்பி வைக்கப்பட்ட பின்பே காரைநகர் வாசி மூலம் மேலும் பரவல் ஏற்பட்டதாகவும் சுட்டிக்காட்டப்படுகின்றது.
Post a Comment