யாழ் ஓட்டுமடம் சந்தியில் மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி கோரவிபத்து (படங்கள் இணைப்பு) - Yarl Voice யாழ் ஓட்டுமடம் சந்தியில் மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி கோரவிபத்து (படங்கள் இணைப்பு) - Yarl Voice

யாழ் ஓட்டுமடம் சந்தியில் மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி கோரவிபத்து (படங்கள் இணைப்பு)

யாழ்ப்பாணம் ஓட்டுமடசதியில் 3 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி கோர விபத்து சற்று முன்னர் இடம்பெற்றுள்ளது.

விபத்து சம்பவத்தில் 3 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.

யாழ்.நகரிலிருந்து ஆறுகால்மடம்  நோக்கி பயணித்த ஆட்டோ மீது குறித்த வீதி ஊடாக யாழ்.நகரம் நோக்கி பணித்த பட்டா வாகனம் கட்டுப்பாட்டை இழந்து மோதியதுடன், அதே திசையில் பயணித்த மோட்டார் சைக்கிள் மீதும் மோதி விபத்துக்குள்ளாகியிருக்கின்றது.

படுகாயமடைந்தவர்கள் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


0/Post a Comment/Comments

Previous Post Next Post