பளை - ஆனைவிழுந்தான் பகுதியில் சொகுசு பேருந்து விபத்து - தனிமைப்படுத்தலுக்கு அழைத்துவரப்பட்ட பலர் காயம் - Yarl Voice பளை - ஆனைவிழுந்தான் பகுதியில் சொகுசு பேருந்து விபத்து - தனிமைப்படுத்தலுக்கு அழைத்துவரப்பட்ட பலர் காயம் - Yarl Voice

பளை - ஆனைவிழுந்தான் பகுதியில் சொகுசு பேருந்து விபத்து - தனிமைப்படுத்தலுக்கு அழைத்துவரப்பட்ட பலர் காயம்
ஓமான் நாட்டிலிருந்து நாடு திரும்பிய 25 பயணிகளை யாழ்ப்பாணம்  விடத்தல்பளை தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு ஏற்றிவந்த சொகுசு  பேருந்து கட்டுப்பாட்டை இழந்து கிளிநொச்சி பளை - ஆனைவிழுந்தான் பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது

இன்று காலை 9.45 மணியளவில் குறித்த விபத்து ஏற்பட்டுள்ளது.

பேருந்து சாரதி துாங்கியதால் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி நீர் விநியோக குழாய் மீது மோதி விபத்து இடம்பெற்றிருக்கின்றது. சம்பவத்தில் 17 பேர் காயமடைந்துள்ளனர். 

படுகாயமடைந்துள்ள 3 பேர் உடனடியாக அம்புலன்ஸ் வண்டி மூலம் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருக்கின்றனர். ஏனையோர் பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

ஓமான் நாட்டிலிருந்து நாடு திரும்விய 254 பேர் தனிமைப்படுத்தலுக்காக விடத்தல்பளை தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு 11 பேருந்துகளில் அழைத்துவரப்பட்ட நிலையில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. 

சம்பவ இடத்தில் சுகாதார பிரிவினர் மற்றும் படையினர், பொலிஸார் பாதுகாப்பு கடமைகளை மேற்கொண்டுள்ளனர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post