கொரோனா தொற்று சிறுவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் - யாழ் போதனா பிரதி பணிப்பாளர் யமுனானந்தா எச்சரிக்கை - Yarl Voice கொரோனா தொற்று சிறுவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் - யாழ் போதனா பிரதி பணிப்பாளர் யமுனானந்தா எச்சரிக்கை - Yarl Voice

கொரோனா தொற்று சிறுவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் - யாழ் போதனா பிரதி பணிப்பாளர் யமுனானந்தா எச்சரிக்கை



covid19 நோயானது தற்போது சமூகத்தில் வலுவாக பரவுகின்றபோது அது சிறுவர்களைத் தாக்கும் சிறுவர்களைத் தாக்கும் போது சிறுவர்களுக்கும் பாதிப்பு ஏற்படலாம்  என யாழ் மாவட்ட போதனா வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர் சி.யமுனாநந்தா தெரிவித்தார் 

Covid 19 நோயும் சிறுவர்களும் தொனிப்பொருளில் கருத்துரைக்கும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார்

இதேநேரம் சிறுவர்களுக்கு சாதாரணமாக இருமல்  தடிமன் அஸ்மா போன்ற நோய்கள்இருக்கும்பொழுதுஅவர்களுக்கு  covid 19  என்ற பயத்தில் சிகிச்சை சிகிச்சைகள் பின் செல்லக்கூடிய சூழ்நிலை ஏற்படும் 

ஏற்கனவே அஸ்மா நோய் உள்ளவர்களுக்கு உரிய மருந்துகள் கிரமமாக கொடுக்கப்பட வேண்டும் அதே போல தூசிகளுக்குள் விளையாடும் பொழுது தொண்டை அழற்சி நோய்கள் ஏற்படலாம் சிறுவர்களுக்கு அவ்வாறு வரும் போது அதற்குரிய மருந்து கொடுக்க வேண்டும் அடுத்ததகுழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு உதவும்  சிறந்த போசணை மிக்க உணவுகளை சிறுவர்களுக்கு வழங்குவதன்மூலம் 
தொற்று ஏற்படும் காலங்களில் உடல்நிலை பாதிப்பதை தவிர்க்கலாம்


 குறிப்பாக புரதச்சத்து நிறைந்த பால் போன்றவற்றை எடுத்தல் வேண்டும் எனவே  குழந்தைகளுக்கு தொற்று ஏற்படும்  பொழுது காய்ச்சல் இருக்கலாம் தொண்டை நோ
 இருக்கும் இருமல் இருக்கலாம் எனவே இவற்றை வைத்தியரின் ஆலோசனைப்படி கலந்தாலோசித்தல் வேண்டும் 

வீட்டில் குழந்தை உள்ளவர்கள் பொது இடங்களுக்கு சென்றுவிட்டு வந்து கைகளை நன்றாக கழுவி விட்டு வீட்டுக்குள்  செல்ல வேண்டும் குறிப்பாக அதிகளவானோர் உள்ள வீடுகளில் சிறுவர்களுடன் அதிகளவில் பழகுவதை தவிர்த்தல் வேண்டும்

வீட்டில் உள்ளகுழந்தைகளுக்கு தொற்று ஏற்படுமாயின் பெரியவர்கள் அல்லது அங்கு உள்ள மூத்தவர்கள் தான் காரணமாக இருக்கலாம் எனவே அதற்குரியவாறாக அவதானமாக செயற்பட வேண்டும் 

அதேபோல சிறுவர்களை வெளியிலிருந்து வருபவர்கள் கட்டி அணைத்து முத்தமிடுதல் போன்ற செயற்பாடுகளை தவிர்த்தல் வேண்டும் அவ்வாறு செய்வதானால் கைகளை நன்றாக கழுவுதல் வேண்டும் கண்டபடி ஆட்கள் வந்து குழந்தைகளை தொடுதலும்தொற்றை ஏற்படுத்தும் 

குறிப்பாக நெருக்கமான இடங்களில் அயல் உள்ளவர்களுடன் விளையாடும்போதும்  தொடுகையின் covidதொற்று  ஏற்படலாம் எனவே தற்போதைய சூழ்நிலையில் சுகாதார பழக்கவழக்கங்களான கைகளை கழுவுதல் போன்ற சுகாதாரநடை முறைகளைப் பின்பற்றுதல் நல்லது 

நோயினால் சிறுவர்கள் அதிக ளவில் உடல் ரீதியாக பாதிப்படையலாம் அ விளையாட விடாது அல்லது தொடர்ச்சியாகவீடுகளில் இருக்கும் போது அல்லது வெளியிடங்களுக்குச் செல்லாமல் இருக்கும் போது அவர்களது உளநலமும் பாதிக்கலாம் எனவே இது தொடர்பிலும் கவனம் செலுத்தல் வேண்டும் 

அதேபோல் உணவு பழக்கவழக்கத்தை பொறுத்தவரை பழரசங்கள் கூடுதலாக நல்லது குழந்தைகளுக்கு நெத்தலி கருவாடு பால் பெருங்காயம் இஞ்சி மஞ்சள் மற்றும் பச்சை இவைகளிலான உணவு  நல்ல உணவாக அமையும் அடுத்ததாக அயடின் கூடிய பழங்கள் எலுமிச்சம் பழம் மற்றும் கொய்யாப்பழம் வாழைப்பழம் என்பவற்றிற்கு சிறந்த நோய் எதிர்ப்பு சக்தி உண்டு அடுத்ததாக நீர்   போன்றவைசிறுபிள்ளைகளுக்கு போதிய நிறைவாக ஆதாரமாக அமையும்

0/Post a Comment/Comments

Previous Post Next Post