ஆயிரம் மில்லியன் ரூபா செலவில் வீதி புனரமைப்பு பணிகள் வடக்கில் ஆரம்பம் - Yarl Voice ஆயிரம் மில்லியன் ரூபா செலவில் வீதி புனரமைப்பு பணிகள் வடக்கில் ஆரம்பம் - Yarl Voice

ஆயிரம் மில்லியன் ரூபா செலவில் வீதி புனரமைப்பு பணிகள் வடக்கில் ஆரம்பம்




அங்கஜனின் பரிந்துரையில் 1000 மில்லியன் ரூபாய் செலவில் யாழில் காப்பெற் வீதி அமைக்கப்படவுள்ளது.

நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்ணான்டோ அவர்களிடம், யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழு இணைத்தலைவரும் பாராளுமன்ற குழுக்களின் பிரதி தவிசாளருமான அங்கஜன் இராமநாதன் யாழ் மாவட்ட வீதி அபிவிருத்திகள் தொடர்பில் முன்மொழிந்தமைக்கு அமைவாக 1.60 கிலோ மீற்றர் தூரமுடைய யாழ்ப்பாணம் - கடற்கரை வீதி 488.4 மில்லியன் ரூபாய் செலவில் சீரமைக்கப்படவுள்ளது.

 5.503 கிலோ மீற்றர் நீளமுடைய வல்லை- உடுப்பிட்டி - வல்வெட்டித்துறை வீதி 507.50 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் சீரமைக்கப்படவுள்ளது .

நாட்டில் ஒரு லட்சம் கிலோ மீற்றர் வீதிகளை அபிவிருத்தி செய்யும் திட்டத்தில் வடக்கு மாகாணத்தில் தெரிவு செய்யப்பட்ட நான்கு வீதிகளை சீரமைக்கும் பணிகளை நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ அவர்களால் நாளை வெள்ளிக்கிழமை  ஆரம்பித்துவைக்கப்படுகிறது.

இந்த நிகழ்வானது கிராமிய பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் தேசிய திட்டம் கூட்டத்தைத் தொடர்ந்து இந்த வீதிகள் சீரமைப்புப் பணி, கட்டுமான பணிகள் இடம்பெறும்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post