நிவர் புயலால் பருத்திதுறையில் பல குடும்பங்கள் பாதிப்பு - Yarl Voice நிவர் புயலால் பருத்திதுறையில் பல குடும்பங்கள் பாதிப்பு - Yarl Voice

நிவர் புயலால் பருத்திதுறையில் பல குடும்பங்கள் பாதிப்பு
நிவர் புயல்: மழை வெள்ளத்தால் பருத்தித்துறையில் 11 வீடுகள் பாதிப்பு!

சீரற்ற காலநிலையால் பெய்துவரும் மழை வெள்ளத்தால் பருத்தித்துறையில் 11 வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளது.

கடந்த நாட்களில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில் அதிகாலை 5.00 மணி வரையான 24 மணி நேரத்தில் வட மாகாணத்தில் அதிகூடிய மழைவீழ்ச்சியாக 103 மி.லீட்டர் மழைப் பொழிவு பருத்தித்துறையில் ஏற்பட்டிருந்தது.

இதனால் தாழ்வான பகுதிகள் மற்றும் தற்காலிக குடிசைகளுக்கு வெள்ள நீர் தேங்கியுள்ளது. இதையடுத்து பருத்தித்துறை பிரதேச செயலர் பிரிவின் யா/404 கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட கலப்பனாவத்தை, தும்பளையில் 11 வீடுகள் பாதிப்படைந்துள்ளன.

காற்று மற்றும் மழைத் தாக்கத்தினால் கூரைத் தகரங்கள் சேதமடைந்தும், வெள்ள நீரால் சூழப்பட்டும் குறித்த 11 வீடுகள் பாதிப்பினை சந்தித்துள்ளன. இவ் அனர்த்தத்தினால் அவ்வீடுகளில் வசித்துவருபவர்கள் பெரும் அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.0/Post a Comment/Comments

Previous Post Next Post