வெள்ளத்தில் மூழ்கிய யாழ் மாவட்டபதிவாளர் நாயகம் திணைக்களம் - Yarl Voice வெள்ளத்தில் மூழ்கிய யாழ் மாவட்டபதிவாளர் நாயகம் திணைக்களம் - Yarl Voice

வெள்ளத்தில் மூழ்கிய யாழ் மாவட்டபதிவாளர் நாயகம் திணைக்களம்யாழ் மாவட்ட செயலகத்தில் இயங்கும் பதிவாளர் நாயகம் திணைக்கள அலுவலகம் நேற்று இரவு  பெய்த கடும் மழையின் தாக்கத்தினால் நான்கு மாடிகளைக் கொண்ட குறித்த கட்டிடத்திற்குள் மழை நீர் உட்புகுந்து அலுவலகம் முழுவதும் வெள்ள நீரால் மூழ்கிய து 

வெள்ளம்  உட்புகுந்த குறித்து அலுவலகத்தினை யாழ் மாவட்ட அரசாங்க அதிபர், மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் அனர்த்த முகாமைத்துவ உதவி பணிப்பாளர் ஆகியோர் விஜயம் மேற்கொண்டு குறித்து அலுவலகத்தினை பார்வையிட்டனர்.

 குறித்து அலுவலகத்தினை பார்வையிட்ட பின் கருத்து தெரிவித்த யாழ்மாவட்ட அரசாங்க அதிபர்

குறித்த அலுவலகத்தில் ஏற்பட்டுள்ள அனர்த்தமானது எதிர்பார்க்காத ஒரு விடயம் எனவும் எனினும் உடனடியாக பொறியியலாளர் அழைக்கப்பட்டு குறித்த கட்டிடத்தில் ஏற்பட்டுள்ள  சேதம் உடனடியாகதிருத்தி  அமைப்படவுள்ளது.

எனினும் குறித்த அலுவலகத்தில் உள்ள ஆவணங்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை எனவும் எனினும் அலுவலகம் பூராகவும் வெள்ளநீர் தேங்கி நிற்பதால் அலுவலக செயற்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post