உன்னிக் காய்ச்சல் தொடர்பில் பொது மக்களுக்கு எச்சரிக்கை - அவதானம் தேவை என்கிறார் யாழ் போதனா பிரதி பணிப்பாளர் - Yarl Voice உன்னிக் காய்ச்சல் தொடர்பில் பொது மக்களுக்கு எச்சரிக்கை - அவதானம் தேவை என்கிறார் யாழ் போதனா பிரதி பணிப்பாளர் - Yarl Voice

உன்னிக் காய்ச்சல் தொடர்பில் பொது மக்களுக்கு எச்சரிக்கை - அவதானம் தேவை என்கிறார் யாழ் போதனா பிரதி பணிப்பாளர்
உண்ணி காய்ச்சல் தொடர்பில் அவதானம் தேவை என யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் சி.யமுனாநந்தா தெரிவித்துள்ளார்

தற்பொழுது பரவிவரும் உண்ணி காய்ச்சல் நோய் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் தெரிவத்ததாவது...

தற்பொழுது  கொரோனா நோய்த்தொற்று பரவி வரும் காலத்தில் எமது பிரதேசத்தில் காய்ச்சல் நோயுடன் பலர் சிகிச்சைக்கு வருகிறார்கள் இந்நிலையில் காய்ச்சல் எவ்வாறு வருகிறது என பார்க்கும்பொழுது பொதுவாக வைரஸ் காய்ச்சல் எமது பிரதேசத்தில் காணப்படலாம்.

அடுத்ததாக டெங்கு காய்ச்சல் பொதுவாக தற்பொழுது ஏற்பட்டு கொண்டுவருகின்றது அடுத்ததாக தற்போது உண்ணி காய்ச்சல் என்ற ஒரு  பக்றீரியா காய்ச்சலும் ஏற்படுகின்றது அடுத்ததாக எலிக்காய்ச்சல் காணப்படுகின்றது காசநோய் குரிய காய்ச்சல் காணப்படுகின்றது
எனவே இந்த காய்ச்சல் எவ்வாறு ஏற்படுகின்றது என்பதை அறிந்து  எவ்வாறு சிகிச்சை அளிக்க வேண்டும் காய்ச்சல் ஏற்பட்டால் வைத்தியரை அணுக வேண்டிய அவசியம் மிக முக்கியமானது 

அந்த வகையில் உண்ணி காய்ச்சல் தற்போது அதிகளவில் ஏற்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன குறிப்பாக யாழ் மாவட்டத்தில்  கோப்பாய் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரியாக கடமையாற்றிய காலங்களில் அவதானித்தேன் பருவகாலங்கள் ஆரம்பிக்கும்போது உண்ணி   காய்ச்சலால் பாதிக்கப்படுவோர் அதிகரிப்பார்கள் அதாவது வயல் வேலை செய்பவர்கள் தோட்ட வேலை செய்பவர்கள் உண்ணி காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அதிகளவில் வைத்தியசாலையில் அனுமதிக்கப் படுவார்கள் 

அடுத்ததாக அறுவடைக் காலங்களிலும் அதிக அளவில் ப உண்ணி காய்ச்சலினால் வைத்தியசாலைக்கு அனுமதிக்கப்படுவார்கள்  உண்ணிகாய்ச்சல் என்பது ஒரு வைரஸால் ஏற்படுகின்றது இது பொதுவாக தெள்ளினால் பரப்பப்படுகின்றது பொதுவாக எலிகள் அணில் நாய் பூனை மற்றும் மிருகங்களின் காணப்படலாம். 

தெள்ளு உடலில் கடித்து அந்த கிருமி உடலுக்குள் செல்வதால் இந்த நோய் ஏற்படுகின்றது இதன்போது காய்ச்சல் , உடல் நோ காணப்படும் இந்த நோய்க்கு உரிய சிகிச்சையினை நோயினை இனங்கண்டுஉடனடியாகவே அதற்குரிய சிகிச்சை அளிக்கப்பட வேண்டும்

உண்ணி காய்ச்சலை இனங்கண்டபின் அவர்களா தோட்டங்களில் வேலை செய்தவர்கள்? அல்லது வீடுகளில் மிருகங்களோடு பழகுபவர்களாக இருக்கிறார்களா என்ற விடயங்களை அறிந்த பின்னர் அவர்களுக்குரிய சிகிச்சையினை அளிக்க வேண்டும் 

மிருகங்களோடு பழகுபவர்களுக்கு  தொற்று ஏற்படுவது சாதாரணமாகும் அத் தோடு உடலில் தெள்ளு கடித்தகாயம் ஏற்படுமாயின் அந்த காயத்தின் ஊடாகவே இந்த கிருமி உடலுக்குள் செல்கின்றது இவற்றை அடையாளம் காண தவறும் இடத்தில் நோய் கடுமையாகி சில வேளைகளில் உயிரிழப்பும் ஏற்படலாம் 

ஆனால் நோய்க்கிருமிக்குரிய சிகிச்சை மிகவும் சுலபமானது வைரஸ் எதிர்ப்பு மருந்தை கொடுப்பதன் மூலம் இதனை கட்டுப்படுத்தலாம் எனவே உண்ணி காய்ச்சலுக்கு பயப்படத் தேவையில்லை உண்ணி காய்ச்சல் வரக்கூடிய சூழல் பொதுவாக தோட்டவேலை செய்பவர்களுக்கு அதிகமாக காணப்படுகின்றது 

அடுத்ததாக உடல் சுத்தம் மிக முக்கியமானது தினமும் அவர்கள் தோட்டத்துக்கு சென்று வந்து குளித்தல் அவசியமானது அத்தோடு ஆடைகளையும் தினமும் துவைத்து பாவிப்பதனால் உடலில் கிருமி தொற்றுதலை தவிர்க்கலாம்  உண்ணி காய்ச்சல் ஏற்படுவதை தவிர்க்கலாம் 

உண்ணி காய்ச்சல் அடையாளம் காணப்படாவிடத்து மரணத்தையும் ஏற்படுத்தலாம் எனவே இது தொடர்பான விழிப்புணர்வு தற்போதைய காலகட்டத்தில் மிகவும் இன்றியமையாதது ஆகும் என்றார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post