வரவு பதிவுசெய்யும் கருவி மூலம் கொரோனா பரவும் என அச்சம்! - யாழ்ப்பாண அரச உத்தியோகத்தர்கள் கவலை- - Yarl Voice வரவு பதிவுசெய்யும் கருவி மூலம் கொரோனா பரவும் என அச்சம்! - யாழ்ப்பாண அரச உத்தியோகத்தர்கள் கவலை- - Yarl Voice

வரவு பதிவுசெய்யும் கருவி மூலம் கொரோனா பரவும் என அச்சம்! - யாழ்ப்பாண அரச உத்தியோகத்தர்கள் கவலை-


யாழ். மாவட்டத்திலுள்ள அரச அலுவலகங்களில் உத்தியோகத்தர்களின் வரவினைப் பதிவுசெய்வதற்கு தற்போதும் கைவிரல் அடையாளம் பதிவுசெய்யும் கருவி பயன்படுத்தப்படுவது குறித்து உத்தியோகத்தர்கள் கவலை  வெளியிட்டுள்ளனர். 

கொரோனா வைரஸ் அதிகமாக பரவிவரும் நிலையில் இவ்வாறான கைவிரல் அடையாளம் பதிவுசெய்தல் தமக்கு பாதிப்பாக அமைகின்றது எனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர். யாராவது ஒரு உத்தியோகத்தருக்கு கொரோனா தொற்று இருக்கும் பட்சத்தில் அது அனைவரையும் பாதிக்கும் எனவும் அவர்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர். 

'கடந்த யுத்த காலத்தில்கூட எந்தவித அச்சமும் இன்றி நாம் பணியாற்றினோம். அப்போது வரவுப் பதிவேடு மாத்திரமே இருந்தது. நிர்வாக உத்தியோகத்தர்கள் காலை 9.00 மணிக்கும் மதியம் 12.30 மணிக்கும் சிவப்பு அடிக்கோடிடுவர். இதன்மூலம் நேர்த்தியாக வரவு பதிவுசெய்யப்பட்டது' எனவும் உத்தியோகத்தர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். 
 
கொரோனா வைரஸ் தொற்று கட்டுப்படுத்தப்படும் வரை கைவிரல் அடையாளம் பதிவுசெய்யும் இயந்திரங்களை நிறுத்திவைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் - என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post