காணிகளை சுவீகரிப்பதை விடுத்து ஆக்கிரமித்த காணிகளை விடுவிக்க வேண்டும் - கயேந்திரன் வலியுறுத்து - Yarl Voice காணிகளை சுவீகரிப்பதை விடுத்து ஆக்கிரமித்த காணிகளை விடுவிக்க வேண்டும் - கயேந்திரன் வலியுறுத்து - Yarl Voice

காணிகளை சுவீகரிப்பதை விடுத்து ஆக்கிரமித்த காணிகளை விடுவிக்க வேண்டும் - கயேந்திரன் வலியுறுத்து



தமிழ் மக்களுக்கு சொந்தமான காணிகளை அரசாங்கம் சுவீகரிக்கும் முயற்சிகள் ஒரு போதும் ஏற்றுக் கொள்ள முடியாது எனத் தெரிவித்துள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கNஐந்திரன் ஏற்கனவே படையினர் ஆக்கிரமித்துள்ள காணிகளை மீள மக்களிடம் கையளிக்க வேண்டுமென்றும் கோரியுள்ளார்.

யாழ். வேலனை பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட மண்டைதீவு Nஐ 7 கிராம சேவகர் பிரிவிலுள்ள தனியாருக்குச் சொந்தமான காணியை கடற்படையினருக்காக சுவீகரிக்கும் முயற்சிக்கு எதிர்ப்புத் தெரிவித்து மேற்கொள்ளப்பட்ட கவனயீர்ப்பு போராத்தில் கலந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது

பொது மக்களுக்குச் சொந்தமான காணியை கடற்படையின் தேவைக்காக சுவீகரிப்பதற்கு எதிராக காணி உரிமையாளர்கள் மக்களுடன் இணைந்து எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தோம். இத்தகைய எதிர்ப்பு நடவடிக்கைகளினையடுத்து காணி சுவீகரிக்கும் முயற்சி தடுத்து நிறுத்தப்பட்டிருக்கின்றது.

இதே போல பல இடங்களிலும் படையினரின் தேவைக்காக காணிகளை சுவிகரிக்கும் நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது. அதற்கு மக்கள் தமது எதிர்ப்பை தொடர்ந்தும் தெரிவித்து வருகின்றனர். ஆனாலும் அரசாங்கமும் தொடர்ந்து காணிகளை சுவீகரிக்கும் முயற்சிகளை எமது பகுதிகளில் மேற்கொண்டு தான் வருகின்றது.

இவ்வாறு மக்களின் காணிகளை ஆக்கிரமிக்கின்ற அரசின் செயற்பாடுகளை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கின்றோம். தமிழ் மக்களின் பெறுமதிமிக்க வளமான காணிகளை ஆக்கிரமிக்கின்ற இத்தகைய செயற்பாடுகளை ஒரு போதும் ஏற்றுக் கொள்ள முடியாது.

குறிப்பாக படையினரின் தேவைக்காக அல்லது வேறு ஏதோவொரு காரணங்களுக்காக பெறுமதிமிக்க வளமான காணிகளை ஆக்கிரமிப்பதற்கு அரசாங்கம் முனைப்புக் காட்டி வருகின்றது. ஆனாலும் அரசின் இத்தகைய செயற்பாடுகள் மக்களுக்கு விரோதமானவையாக உள்ளதுடன் ஏற்றுக் கொள்ள முடியாததாகவே இருக்கின்றது.

ஆகவே காணி சுவீகரிக்கும் நடவடிக்கையை தொடர்ந்தும் அரசாங்கம் முன்னெடுக்காமல் நிறுத்ததிக் கொள்ள வேண்டும். அதே நேரம் ஏற்கனவே அபகரிக்கப்பட்ட அல்லது ஆக்கிரமிக்கப்பட்ட மக்களின் காணிகளை மிளவும் மக்களிடமே கையளிக்க வேண்டுமென்றும் கேட்டுக் கொள்கிறோம் என்றார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post