யாழில் இன்று மட்டும் 9 பேருக்கு கொரோனா - கிளிநொச்சியிலும் ஒருவருக்குமாக வடக்கில் 10 பேருக்கு தொற்று உறுதி - Yarl Voice யாழில் இன்று மட்டும் 9 பேருக்கு கொரோனா - கிளிநொச்சியிலும் ஒருவருக்குமாக வடக்கில் 10 பேருக்கு தொற்று உறுதி - Yarl Voice

யாழில் இன்று மட்டும் 9 பேருக்கு கொரோனா - கிளிநொச்சியிலும் ஒருவருக்குமாக வடக்கில் 10 பேருக்கு தொற்று உறுதி




வடக்கில் இன்று மட்டும் 10 பேருக்கு கொரோனா தொற்று  உறுதி செய்யப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளர் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழ் பல்கலைக்கழக மருத்துவபீட ஆய்வுகூடம் மற்றும் யாழ் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடம் ஆகிய இரண்டு இடங்களிலும் 601 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில்
10 பேருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இதில் யாழ் பல்கலைக்கழக ஆய்வுக்கூடத்தில் 120 பேருக்கும் யாழ் போதனா வைத்தியசாலை ஆய்வுக்கூடத்தில் 481 பேருக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதில் யாழ்ப்பாணத்தில் தெல்லிப்பலை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் எட்டு பேருக்கும் உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவருக்குமாக 9 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதேபோன்று கிளிநொச்சி மாவட்டத்தில் கரைச்சி சுகாதார வைத்தியதிகாரி பிரிவில் ஒருவருக்கு மாக இன்றைய தினம் வடக்கில் மொத்தமாக பத்து பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

601 samples (total) were tested in Medical faculty laboratory(120 samples) and Teaching  hospital Jaffna laboratory (481 samples)   today.

**Today test confirmed 10 are positive from Northern Province*

1 from MOH Karaichchi, and 1 from MOH uduvil and 8 from MOH Tellipalai

The 1 got positive from Karaichchi MOH area related with earlier  long distance lorry driver.

0/Post a Comment/Comments

Previous Post Next Post