கடந்த இரண்டு வாரங்களுக்குள் மருதனார்மடம் சந்தைக்கு சென்று வந்தவர்களுக்கு சுகாதார பிரிவினர் விடுத்துள்ள அறிவித்தல் - Yarl Voice கடந்த இரண்டு வாரங்களுக்குள் மருதனார்மடம் சந்தைக்கு சென்று வந்தவர்களுக்கு சுகாதார பிரிவினர் விடுத்துள்ள அறிவித்தல் - Yarl Voice

கடந்த இரண்டு வாரங்களுக்குள் மருதனார்மடம் சந்தைக்கு சென்று வந்தவர்களுக்கு சுகாதார பிரிவினர் விடுத்துள்ள அறிவித்தல்யாழ்ப்பாணம் உடுவில் பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட பகுதியில் அடையாளம் காணப்பட்ட முதலாவது தொற்றாளியைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனையில் 39 கொரோனா  தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளார்கள். 

இவர்கள் உடுவில் பிரதேச செயலகப் பகுதியில் மட்டுமற்றி யாழ்ப்பாணத்தில் ஏனைய பிரதேச செயலகப் பிரிவுகளிலும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அத்துடன் தமது நாளாந்த தேவைகளுக்காக உடுவில் பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட மக்கள் மட்டுமன்றி ஏனையோரும் மருதனார்மடம் பொதுச் சந்தைக்கு செல்வது வழக்கமான ஒன்றாகும். 

எனவே கடந்த இரண்டு கிழமைகளுக்குள் மருதனார்மடம் பொதுச் சந்தைக்கு பொருட்கள் வாங்குவதற்கு சென்றவர்கள்  தங்கள் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பிரிவினருடன் (சுகாதார வைத்திய அதிகாரி, பொதுச்சுகாதார பரிசோதகர், குடும்பநல உத்தியோகத்தர்) அல்லது கிராம சேவை உத்தியோகத்தரிடம் தொடர்புகொண்டு தம்முடைய  தகவல்களை தெரிவிப்பதுடன் சமூகத் தொற்றை தடுப்பதற்காக மேற்கொள்ளப்படும் PCR  பரிசோதனையும் செய்துகொள்ள முடியும். 

அவ்வாறு தகவல் வழங்குவதில் ஏதும் சிரமங்கள் இருப்பின் வடமாகாண சுகாதாரத் திணைக்களத்தின் அவசர அழைப்பெண்ணான 012 222 6666 என்ற இலக்கத்துடன் தொடர்புகொண்டு தங்கள் சந்தேகங்களுக்குரிய விபரங்களை தெரியப்படுத்துவீர்களாயின் தங்களையும் தங்கள் குடும்பத்தினரையும், சமூகத்தையும் கொரோனா தொற்றிலிருந்து பாதுகாக்க முடியும் என்பதை தெரிவித்துக்கொள்கின்றேன்.

வைத்தியகலாநிதி ஆ. கேதீஸ்வரன்
மாகாண சுகாதார சேவைகள் பணிப்பார்
வடமாகாணம்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post