மலர்ந்துள்ள புத்தாண்டு தமிழ் மக்களுக்கு மகிழ்ச்சியையும், வசந்தத்தையும் கொடுக்கட்டும் - வாழ்த்து செய்தியில் முதல்வர் - Yarl Voice மலர்ந்துள்ள புத்தாண்டு தமிழ் மக்களுக்கு மகிழ்ச்சியையும், வசந்தத்தையும் கொடுக்கட்டும் - வாழ்த்து செய்தியில் முதல்வர் - Yarl Voice

மலர்ந்துள்ள புத்தாண்டு தமிழ் மக்களுக்கு மகிழ்ச்சியையும், வசந்தத்தையும் கொடுக்கட்டும் - வாழ்த்து செய்தியில் முதல்வர்மலர்ந்துள்ள புத்தாண்டு தமிழ் மக்களுக்கு மகிழ்ச்சியையும், வசந்தத்தையும் கொடுக்கும் ஒரு ஆண்டாக அமைய வேண்டுமென தான் இறைவரை பிரார்த்திப்பதாக யாழ்.மாநகர முதல்வர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.

மலர்ந்திருக்கும் 2 ஆயிரத்து 21 ஆம் ஆண்டு புதுவருட வாழ்த்து செய்தியிலேயே சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் இவ்வாறு தெரிவித்துள்ளார்

2021 ஆம் ஆண்டு மலர்ந்துள்ளது. இந் நாளில் அனைவருக்கும் அனைத்தும் கிடைத்து வளமான வாழ்வியல் மலர்ந்து ஒளிமயமான வாழ்க்கையை தமிழருக்கு இப் புத்தாண்டு வழங்கட்டும். 

அத்துடன் எமது தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை, வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட எமது உறவுகளுக்கான நீதி என தமிழினம் படும் இன்னல்களுக்கு விடிவு கண்டிடவும் வறுமைக்  கோட்டிற்குக் கீழ் யாரும் இல்லை என்ற நிலை அடையவும், பெண்களின்  வாழ்வு உயரவும், அறிவுசார் சமுதாயத்தை உருவாக்கவும், தமிழினம் பல சிறப்புகளைப் பெற்றிட இப்புத்தாண்டில் உறுதியேற்போம் 

இன்றைய காலத்தின் நிலையறிந்து உலகத்தை அச்சுறுத்தி கொண்டிருக்கும் கொரோனா என்ற பெருந்தொற்று நோய் பரவுதலை கட்டுப்படுத்தும் நோக்குடனான சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி இப் புத்தாண்டை அமைதியாக கொண்டாடி மகிழ்வதோடு இவ்வாண்டு கொரோனா தொற்றிலிருந்து முற்றிலும் விடுபடும் ஆண்டாகவும் அனைவருக்கும் அமையவும் பிரார்த்திப்போம். 
என்றும் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

விஸ்வலிங்கம் மணிவண்ணன்
மாநகர முதல்வர்
யாழ்.மாநகர சபை

0/Post a Comment/Comments

Previous Post Next Post