கொரோனா தொற்றால் ஆபத்தில் தமிழ் அரசியல் கைதிகள்; நேரில் ஆராயுமாறு ஐநாவிடம் கஜேந்திரகுமார் கோரிக்கை - Yarl Voice கொரோனா தொற்றால் ஆபத்தில் தமிழ் அரசியல் கைதிகள்; நேரில் ஆராயுமாறு ஐநாவிடம் கஜேந்திரகுமார் கோரிக்கை - Yarl Voice

கொரோனா தொற்றால் ஆபத்தில் தமிழ் அரசியல் கைதிகள்; நேரில் ஆராயுமாறு ஐநாவிடம் கஜேந்திரகுமார் கோரிக்கை


சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் பலருக்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்ற நிலையில் அவர்களுக்கு உரிய மருத்துவ வசதிகளோ உணவு வசதிகளோ ஏற்படுத்திக் கொடுக்கப்படவில்லை என தமிழ்த்  தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

இதனால் தமிழ் அரசியல் கைதிகள் பெரும் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ள கNஐந்திரகுமார் அரசியல் கைதிகளில் இத்தகைய நிலைமை தொடர்பில் நேரில் ஆராயுமாறு ஐக்கிய நாடுகள் உயர்ஸ்தானிகராலயத்திற்கும் முறையீடு செய்துள்ளார்.

நீண்டகாலமாக சிறைகளில் தமிழ் அரசியல் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களில் பலருக்கு தற்பொது கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அறிகின்றோம். அவ்வாறு தொற்று உறுதிப்படுத்தப்பட்ட கைதிகளுக்கு உரிய உணவு வசதிகளோ மருத்துவ வசதிகளோ எவையும் செய்து கொடுக்கப்படவில்லை. 

இதனால் அவர்கள் பல்வேறு பாதிப்புக்களை எதிர்நோக்கியுள்ளனர். ஆகவே அவர்களுக்காண வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். இவ்வாறான நிலையில் தமிழ் அரசியல் கைதிகளின் நிலைமை தொடர்பில் ஐக்கிய நாடுகள் உயர்ஸ்தானகராயத்திற்கு முறையீடு செய்யப்பட்டுள்ளது.

அத்தோடு பாதிக்கப்பட்டு நிர்க்கதி நிலையிலுள்ள தமிழ் அரசியல் கைதிகளை நேரில் சென்று பார்வையிடுமாறு ஐ.நா உயர்ஸ்தானிகராலயத்தையும் கோரியுள்ளதாகவும் கNஐந்திரகுமார் மேலும் தெரிவித்தார். 

0/Post a Comment/Comments

Previous Post Next Post