தமிழ் மக்களுக்கு அரசாங்கம் எதனையும் செய்யாத நிலையில் தமிழ் மக்களின் பிரதிநிதிகளும் சந்தர்ப்பவாத அரசியல் ஈடுபடுகின்றனர் - தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கம் குற்றச்சாட்டு - Yarl Voice தமிழ் மக்களுக்கு அரசாங்கம் எதனையும் செய்யாத நிலையில் தமிழ் மக்களின் பிரதிநிதிகளும் சந்தர்ப்பவாத அரசியல் ஈடுபடுகின்றனர் - தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கம் குற்றச்சாட்டு - Yarl Voice

தமிழ் மக்களுக்கு அரசாங்கம் எதனையும் செய்யாத நிலையில் தமிழ் மக்களின் பிரதிநிதிகளும் சந்தர்ப்பவாத அரசியல் ஈடுபடுகின்றனர் - தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கம் குற்றச்சாட்டு




அரசு பதவியேற்று ஒரு வருடம் ஆகி விட்டபோதிலும் தமிழ் மக்களுக்குரிய எந்த பிரச்சனைகளும் தீர்க்கப்படவில்லை என யாழ் மாவட்ட தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் அமைப்பாளர் இன்பராஜா தெரிவித்தார் .


இன்று யாழ்ப்பாணத்தில் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார் 

தற்போதைய அரசானது பதவியேற்று ஒரு வருட காலம் பூர்த்தி அடைந்துள்ள நிலையிலும் தமிழ் மக்களுடைய பிரச்சினைகளாகிய மீள் குடியேற்றம் காணாமலாக்கப்பட்டோர் விடயம் அரசியல் கைதிகளை விடுதலை போன்ற எந்தவித பிரச்சினைக்கும் தீர்வு முன்வைக்கப்படவில்லை.

 வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகள் தொடர்ச்சியாக போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றார்கள் அத்தோடு அரசியல் கைதிகளின் விடுதலை கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்கள் அதேபோல வடக்கில் இடம்பெயர்ந்த மக்கள் தங்களுடைய மீள்குடியேற்றத்தை வலியுறுத்தி  போராடிக் கொண்டிருக்கின்றார்கள்.

 மீனவ மக்கள் தங்களுடைய தொழில் பாதிப்புக்கு எதிராக  தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கின்றார்கள் இந்த போராட்டத்தையும் நடாத்துகின்ற மக்கள் எதிர்காலத்தில் தீர்வைப் பெற முடியாது சலிப்படைந்துள்ளார்கள். 

 இந்த போராட்டம் நடைபெற்றுநலிவுற்று போக வேண்டும் என்பதுதான் இந்த அரசாங்கம் எதிர்பார்க்கின்றது அதற்கு சாதகமாக  அரசியல் தலைவர்கள் கட்சிகளுடைய நிலைப்பாடுகளும் காணப்படுகின்றன 

ஏனெனில் போராட்டங்களை போராடுகின்ற மக்களின் பிரச்சனையாக பார்க்காது கட்சித் தலைவர்கள் தங்களுடைய போராட்டம் இது மக்கள் உடைய போராட்டம் அத்தோடு மக்களுடன் இணைந்து மக்களோடு ஒன்றிணைந்து முன்வந்து அரசாங்கத்திற்கு எதிரான இந்த போராட்டங்களில் இணைந்து அரசுக்கு அழுத்தம் கொடுக்க முன்வரவேண்டும்

 அத்தோடு மக்களுடைய கோரிக்கைகளை தீர்ப்பவர்களாக இருந்தால் பாராளுமன்றத்தில் போராட்டத்தில் ஈடு படலாம் ஆனால் அவர்கள் அவ்வாறு செயற்படுவதில்லை அவர்கள்  தற்போதைய அரசாங்கத்தோடு அனுசரித்து சந்தர்ப்பவாத அரசியலில்ஈடுபடுகிறார்கள் எனவும்தெரிவித்தார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post