பலாலி விமான நிலையம் மூடப்பட மாட்டாது - விரைவில் அதன் சேவைகள் ஆரம்பிக்கப்படும் - பொய் பொய்யான செய்திகளை சிலர் திட்டமிட்டு பெறப்போவதாக டக்ளஸ் ஆதங்கம் - Yarl Voice பலாலி விமான நிலையம் மூடப்பட மாட்டாது - விரைவில் அதன் சேவைகள் ஆரம்பிக்கப்படும் - பொய் பொய்யான செய்திகளை சிலர் திட்டமிட்டு பெறப்போவதாக டக்ளஸ் ஆதங்கம் - Yarl Voice

பலாலி விமான நிலையம் மூடப்பட மாட்டாது - விரைவில் அதன் சேவைகள் ஆரம்பிக்கப்படும் - பொய் பொய்யான செய்திகளை சிலர் திட்டமிட்டு பெறப்போவதாக டக்ளஸ் ஆதங்கம்



நீண்டகாலமாக இருந்து வரும் பாரிய பிரச்சினைகளுள் ஒன்றான் கடற்பயணங்களில் ஈடுபடுகின்ற வள்ளங்களுக்கு தகைமைச் சான்றிதழ் வழங்கும் அல்லது பழுதடைந்த வள்ளங்களை திருத்துவதில் இருந்துவரும் பிரச்சினைகளுக்கு இன்று நிரந்தர தீர்வு கிடைத்துள்ளது என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளதுடன் அதற்காக துறைமுகங்கள் மற்றும் கப்பற்துறை அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன அவர்களுக்கு எமது மக்கள் சார்பாகவும் நன்றிகளை தெரிவித்துள்ளார்.

ஊர்காவற்றுறையில் அமைக்கப்பட்டுள்ள வணிக கப்பற்றுறை செயலக உப அலுவலகம் மற்றும் கடற்கலங்கள் பரிசோதிக்கும் தளம் ஆகியன இன்றையதினம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் துறைமுகங்கள் மற்றும் கப்பற்துறை அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன ஆகியோரால் இன்றையதினம் சம்பிரதாயபூர்வமாக திறந்துவைக்கப்பட்டது. இந்நிகழ்வில் கப்பற்துறை அமைச்சருடன் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்து உரையாற்றுகையிலேயே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இவ்வாறு தெரிவித்திருந்தார். 

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில் -

ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச அவர்களின் தலைமைத்துவத்திலும் பிரதமர் மகிந்த ராஜபக்ச அவர்களின் வழிநடத்தலிலும் இந்நாட்டின் அபிவிருத்திகள் அல்லது இந்த நாடு எதிர்கொள்கின்ற பிரச்சினைகளை எதிர்கொண்டு முன்டுனெடுக்கின்ற விதங்கள் எந்தவகையிலும் பாரபட்சமற்ற வகையிலேயே மேற்கொள்ளப்படுகின்றன.

ஆனாலும் சில அரசியல்வாதிகளும் ஒருசில ஊடகவியலாளர்களும் தமது சுயநலன்களுக்காக தவறான செய்திகளை பரப்ப முற்படுகின்றனர்.

குறிப்பாக பலாலி விமான நிலையத்தை அரசாங்கம் மூடவுள்ளதாக செய்திகளை கூறிவருகின்றனர். ஆனால் அதில் எவ்வித உண்மையும் கிடையாது. அது விரைவில் தனது சேவையை மேற்கொள்ளும் என தெரிவித்தார்

அதேபோன்று கடலுணவு மற்றும் மரக்கறிவகைகளை பாதுகாப்பதற்கென 10 குளிரூட்டி வசதிகொண்ட வாகனங்கள் வழங்குவதற்கு அமைச்சர் நடவடிக்கை மேற்கொண்டு அமைச்சரவையின் அனுமதியை கோரியுள்ளார். அந்த வாகனங்களில் தீவகத்திற்கும் ஒன்றை தருமாறு நான் அவரிடம் கோரியதற்கிணங்க அந்த வாகனத்தை தருவதற்கு அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன இணக்கம் தெரிவித்துள்ளார். அதனடிப்படையில் அந்த வாகனம் விரைவில் இங்கு வரும் எனவும் அமைச்சர் தெரிவித்திருந்தார்.

மேலும் காங்கேசன்துறை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வது அவசியமானதென நான் பல வருடங்களாக முயற்சி செய்து வருகின்றேன். அது எமது பிரதேசத்தின் பல இளைஞர் யுவதிகளுக்கு தொழில் வாய்ப்பகளையும் முதுலப்பொருட்களையும் வழங்கிவந்த ஒரு நிறுவனமாக இருந்துள்ளது. அதனால் இந்று அதனை மீளவும் திறப்பதற்கான முயற்சியை மேற்கொண்டு அதை பார்வையிட செல்லவுள்ளோம்.

அதேபோன்று பருத்தித்துறை மீன்படி இறக்கு துறைமுகத்தையும் அபிவிருத்தி செய்து வடபகுதியிலள்ள இளைஞர் யுவதிகளுக்கு தொழில் வாய்ப்புகளை உருவாக்கி கொடுப்பதுடன் இந்தியாவிலிருந்து நேரடியாகவே பொருட்களை இறக்குமதி செய்து குறைந்த விலையில் பொருட்களை மக்களிடம் கொண்டுசெல்ல மடியும் எனவும் என தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இந்த அரசாங்கம் பாரபட்சமற்ற வகையில் அனைத்த மக்களுக்கும் தேவையான அனைத்தையும் பெற்றுக்கொடுக்க முழுமையாக பாடுபடும் என்றும் தெரிவித்துள்ளார்    

0/Post a Comment/Comments

Previous Post Next Post