கொரோனா பரவல் தொடர்பில் யாழ்ப்பாண மக்களுக்கு இராணுவத்தளபதி விடுத்துள்ள அறிவிப்பு - Yarl Voice கொரோனா பரவல் தொடர்பில் யாழ்ப்பாண மக்களுக்கு இராணுவத்தளபதி விடுத்துள்ள அறிவிப்பு - Yarl Voice

கொரோனா பரவல் தொடர்பில் யாழ்ப்பாண மக்களுக்கு இராணுவத்தளபதி விடுத்துள்ள அறிவிப்பு




எதிர்வரும் இரண்டு வாரங்கள் மிகவும் அவதானம் தேவை எனஇராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்

யாழ்ப்பாணத்திற்க் விஜயத்தை மேற்கொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது இராணுவத் தளபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்

தமிழ் மக்கள் அதிகமாக வாழ்ந்து வரும் வடபகுதியில் குறிப்பாக யாழில் கொரோனாமுதலாவது அலை தாக்கம் ஆரம்பம் முதல்  சுகாதார அமைச்சினால் வெளியிடப்படும் சுகாதார நடைமுறைகளை வடபகுதி மக்கள் ஒழுக்கமாகவும் நேர்த்தியாகவும் கடைப்பிடிக்கிறார்கள் அதன் காரணமாக முப்படையினர் மற்றும் போலீசார் சுகாதாரப் பகுதியினரால்  வடபகுதியில்  இலகுவாககொரோனா  தொற்று பரவலை கட்டுப்படுத்த கூடியாததாகவுள்ளது.

 அத்தோடு நேற்றைய தினம் கூட ஜனாதிபதி யாழ் மாவட்ட நிலவரம் தொடர்பில் எம்முடன் கலந்துரையாடினார் அத்தோடு அரசாங்க அதிபர் ஊடாக தற்போதைய நிலைமைகள் தொடர்பில்  கண்காணித்து வருகிறோம் எனினும் எதிர்வரும் இரண்டு வாரங்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டிய வாரமாக காணப்படுகின்றது எனவே இரண்டு வாரங்களும் மக்கள் சுகாதார பிரிவினருக்கு பூரண ஒத்துழைப்பினை வழங்க வேண்டும் அத்தோடு தமிழ் மக்களுக்கு இந்த கொரோனா நோயினை கட்டுப்படுத்துவதற்கு உதவியதற்காக நாட்டின் ஜனாதிபதி மற்றும் பிரதமர் சார்பில் நான் தமிழ் மக்களுக்கு மிக்க நன்றியை தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன்

எதிர்வரும் வாரங்களில் நத்தார் மற்றும் புதுவருட கொண்டாட்டங்கள் இடம்பெறும் வாரங்கள் எனினும் அந்த காலத்தில்நாட்டில்  சில புதிய சுகாதார நடைமுறைகளை நாங்கள் செயற்படுத்துவதற்கு எதிர்பார்த்துள்ளோம் 
 அது  எவ்வாறான  நடைமுறைகள் தொடர்பில் நாம் ஆராய்ந்து வருகின்றோம் 

மக்களை covid தொற்றிலிருந்து பாதுகாக்கும் முகமாக மக்களை பாதிக்காதவாறு சில சுகாதார கட்டுப்பாடுகளை  எடுக்கவுள்ளோம் அதற்காக அனைவரையும் தனிமைப்படுத்த மாட்டோம் ஆனால் covid தொற்றிலிருந்து  மக்களைப் பாதுகாக்க முகமாகவே சில நடைமுறைகளை செயற்படுத்த வுள்ளோம்


ஏனைய நாடுகளோடு ஒப்பிடும்போது இலங்கையை பொறுத்த வரைக்கும் கொரோனாவானது கட்டுப்பாட்டுக்குள் தான் இருக்கின்றது எனினும் அதனை தொடர்ச்சியாக பேணவேண்டும் அதற்கு பொதுமக்கள் உதவ வேண்டும் 

குறிப்பாக தனிமைப் படுத்தப் பட்டவர்கள் எக்காரணம் கொண்டும் வீடுகளை விட்டு வெளியில் செல்லக் கூடாது அவ்வாறு சென்றால் ஏனையவர்களுக்கும் இலகுவாகப் பரவும் யாழ்ப்பாணத்தில் அவ்வாறு இடம்பெறவில்லை ஆனால் கொழும்பின் சில இடங்களில் இவ்வாறு நடந்துள்ளது எனவே அவ்வாறானவற்றை  தவிர்த்துக்கொள்ள வேண்டும் அத்தோடு எதிர்காலத்தில் நடமாடும் பிசிஆர் பரிசோதனைகளை மேற்கொள்வதற்கு சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது எதிர்காலத்தில் கொரோனாவினை கட்டுப்படுத்துவதற்காக எதிர்வரும் வாரமளவில் சில புதிய கட்டுப்பாடுகளை நடைமுறை படுத்துவதற்கு எதிர்பார்த்து உள்ளோம் எனவும்தெரிவித்தார்







வட்டுக்கோட்டையில் ராணுவத்தினரால் புனர் நிர்மாணம்  செய்யப்பட்ட குளம் ஒன்றை திறப்பதற்காக இன்று யாழ்ப்பாணம் வந்திருக்கின்றேன் இந்தப் பிரதேச மக்களின் விவசாய தேவையினை பூர்த்தி செய்யக்கூடிய இந்த குளத்தினை ராணுவத்தினர் புனர மைத்துள்ளார்கள் அது இன்றைய தினம் மக்கள் பயன்பாட்டுக்கு கையளிக்கப்பட்டுள்ளது 

அதிமேதகு ஜனாதிபதி அவர்களின் விவசாய துறையை விருத்தி செய்ய வேண்டும் என்ற எண்ணக் கருவுக்கு அமைவாக வடக்குப் பகுதியில் இராணுவத்தினரால் பல்வேறு விவசாய அபிவிருத்திசெயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன அதேபோல யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பிரதேசத்தில் 600 விவசாயிகள் பயன்பெறகூடிய இந்த குளமானது இன்று புனரமைக்கப்பட்டு மக்கள் பாவனைக்காக கையளிக்கப்பட்டுள்ளது


 குறிப்பாக இவ்வளவு காலமும் இந்த பகுதியில் உள்ள விவசாயிகள் எதிர்நோக்கி வந்த நீர் பிரச்சினைக்கு ஒரு தீர்வு கிடைத்து விட்டது  எதிர்காலத்திலும் யாழ் மாவட்டத்தில் விவசாய துறையை விருத்தி செய்வதற்கு இராணுவத்தினர் தமது முழு பங்களிப்பினை வழங்குவார்கள் 

 இது மட்டுமல்லாது தமிழர்கள் அதிகம் வாழும் வடக்கு பிரதேசம் மற்றும் யாழ்ப்பாண மாவட்டத்தில் ராணுவத்தினரால் பல்வேறுபட்ட சமூக வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன அதாவது வருமானம் குறைந்தவர்களுக்கு 700க்கும் மேற்பட்ட வீடுகள் ராணுவத்தினரால் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளன இன்னும் மேலும் பல வீடுகள் அமைக்கப்பட உள்ளன அதற்குரிய வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டு செயற்படுத்தப்படுகிறது 

அத்தோடு  வடபகுதியில் ராணுவத்தினரால் பல்வேறுபட்ட மனிதாபிமான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன உதாரணமாக அண்மையில் யாழ் மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் புயல் அனர்த்தத்தின் போது இராணுவத்தினர் மனிதாபிமான உதவிகளை புரிந்திருக்கிறார்கள்  தற்பொழுது இராணுவமானது நல்லிணக்கம் மற்றும் இன ஒற்றுமையை ஏற்படுத்தும் முகமாகவே செயற்பட்டு வருகின்றது எனவே எமது ராணுவ வீரர்கள் இந்த மனிதாபிமான செயற்பாடுகளை மக்களுக்கு செயல்படுத்துவதன் மூலம் எதிர்காலத்தில் இன நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் 

தற்போது இங்கே ஒருவர் யாழ்ப்பாண மாவட்டத்தில் போதைப்பொருள் மற்றும் வன்முறைச் சம்பவங்களை இராணுவத்தினர் கட்டுப்படுத்த வேண்டும் என ஒரு கோரிக்கையினை விடுத்திருந்தார்  அதற்கிணங்க எதிர்காலத்தில் போலீசாருடன் இணைந்து ராணுவமும் யாழ்ப்பாண மாவட்டத்தில் போதைப்பொருள் மற்றும் வன்முறை சம்பவங்களை கட்டுப்படுத்தும்செயற்பாட்டில் ஈடுபடுவார்கள் 


தற்போது யாழ் மாவட்டத்தில் போதைப் பொருள் பாவனை அதிகரித்துள்ளது அனைவரும் அறிந்த விடயமே எதிர்காலத்தில் இவ்வாறான செயற்பாடுகள் இடம்பெறாதவாறு இராணுவம் தனது பூரண ஒத்துழைப்பை வழங்கும் எனவும் தெரிவித்தார்



0/Post a Comment/Comments

Previous Post Next Post