தெல்லிப்பழையில் எரியூட்டப்படும் மருத்துவ கழிவுகளால் மனித குலத்திற்கே ஆபத்து - உடனடி நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை - Yarl Voice தெல்லிப்பழையில் எரியூட்டப்படும் மருத்துவ கழிவுகளால் மனித குலத்திற்கே ஆபத்து - உடனடி நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை - Yarl Voice

தெல்லிப்பழையில் எரியூட்டப்படும் மருத்துவ கழிவுகளால் மனித குலத்திற்கே ஆபத்து - உடனடி நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை



தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்கு பின்புறமாக அமைந்துள்ள மருத்துவ கழிவுகளை எரிக்கும் தொகுதியால் பிரதேசத்தின் மனித குலத்துக்கே ஆபத்து வருமென  வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலை தலைவர் வைத்தியர் கே சுயந்தன் அச்சம் பெற்றுள்ளார்.

இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் இடம்பெற்ற வைத்தியர்களின் பணிப் பகிஷ்கரிப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சுமார் 50க்கும் மேற்பட்ட வைத்தியர்கள் கடமையாற்றுகின்ற நிலையில் 5 வித கோரிக்கையை முன்வைத்து பகுதி நேர அடையாள பணிப்பகிஷ்தரிப்பில் ஈடுபட்டோம்.

எமது கோரிக்கைகளான மேலதிக நேர கொடுப்பனவு உரிய முறையில் வழங்கப்படாமை,வெளி நோயாளர் பிரிவில் கடமையாற்றும் வைத்தியர்களுக்கான கொரோனா உகந்த முகக்கவசம் மற்றும் ஆடைகள் போதிய அளவு இல்லாமை. மயக்க மருந்து நிபுணரை யாழ் போதனா வைத்தியசாலையில் இருந்து பெற்றுத் தருதல், 

தெல்லிப்பழை வைத்தியசாலையின் சில பிரிவுகளை மத்திய அரசின் கீழ் கொண்டுவருதலுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலை வளாகத்தில் அமைந்துள்ள யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளரின் கண்கானிப்பில் இயங்கும் மருத்துவ கழிவுகள் எரியூட்டும் தொகுதியை சீர் செய்யுமாறும் எமது கோரிக்கை விடுத்துள்ளோம்.

மருத்துவ கழிவு எரியூட்டும் தொகுதியில் பல குறைபாடுகள் காணப்படுகிறது அதாவது குறித்த அறிவு தொகுதியானது ஆபத்தான மருத்துவக் கழிவுகளை எரியூட்டும் எரியோடு வதற்கான வெப்பநிலை போதாத நிலையிலும் அதன் புகைபோக்கி 50அடிக்கு குறைவானதாகவும் காணப்படுகிறது.

நாம் எமது வைத்தியசாலையின் அத்தியட்சகர் ஊடாக பலமுறை யாழ் போதனா வைத்திய சாலையின் பணிப்பாளர் வைத்தியர் சத்தியமூர்த்தியிடம் தெரிவித்தும் காத்திரமான நடவடிக்கைகளை ஏதும் இடம்பெறவில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post