முதல்வருக்கான சொகுசு வாகனத்தை நிராகரித்தார் மணிவண்ணன் - தனது சொந்த வாகனத்தையே பயன்படுத்த முடிவு - Yarl Voice முதல்வருக்கான சொகுசு வாகனத்தை நிராகரித்தார் மணிவண்ணன் - தனது சொந்த வாகனத்தையே பயன்படுத்த முடிவு - Yarl Voice

முதல்வருக்கான சொகுசு வாகனத்தை நிராகரித்தார் மணிவண்ணன் - தனது சொந்த வாகனத்தையே பயன்படுத்த முடிவுயாழ் மாநகர முதல்வராக தேர்வுசெய்யப்பட்ட சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணிடம் மாநகர முதல்வருக்கான சொகுசு ரக வாகனத்தினை மாநகர ஆணையாளர் கையளித்த நிலையில் அதனை ஏற்க மறுத்த மணிவண்ணன் தனது சொந்த வாகனத்தையே பயன்படுத்தப்போவதாகத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக தனது சம்பளத்தினைப் பெற்றுக்கொள்ளப்போவதில்லை என்றும் தனக்கான சம்பளத்தினை மக்களின் பொது நலத் திட்டங்களுக்கே பயன்படுத்தப்போவதாகவும் அறிவித்திருந்த யாழ் மாநகர முதல்வர் மணிவண்ணன் தற்போது முதல்வருக்கான சொகுசு ரக வாகனத்தினையும் தான் பயன்படுத்தப்போவதில்லை என அறிவித்திருக்கிறார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post