இலங்கை அணிக்கெதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் தென்னாபிரிக்கா கிரிக்கெட் அணி இன்னிங்ஸ் மற்றும் 45 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.
இந்த வெற்றியின் மூலம் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் தென்னாபிரிக்கா அணி முன்னிலைப் பெற்றுள்ளது.
சென்சுரியனில் கடந்த சனிக்கிழமை ஆரம்பமான இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி முதல் இன்னிங்ஸிற்காக 396 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதில் இலங்கை அணி சார்பில் அதிகப்பட்ச ஓட்டங்களாக தினேஷ் சந்திமால் 85 ஓட்டங்களையும் தனஞ்சய டி சில்வா 79 ஓட்டங்களையும் தசுன் சானக ஆட்டமிழக்காது 66 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
தென்னாபிரிக்க அணியின் பந்துவீச்சில்இ சிபம்லா 4 விக்கெட்டுகளையும் முல்டர் 3 விக்கெட்டுகளையும் லுங்கி இங்கிடி மற்றும் நோட்ஜே ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இதனைத்தொடர்ந்து முதல் இன்னிங்சை தொடங்கிய தென்னாபிரிக்கா அணிஇ 621 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாகஇ டு பிளெஸிஸ் 199 ஓட்டங்களையும் எல்கர் 95 ஓட்டங்களையும் மஹாராஜ் 79 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
இலங்கை கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில்இ வனிந்து ஹசரங்க 4 விக்கெட்டுகளையும் விஷ்வ பெனார்டோ 3 விக்கெட்டுகளையும் லஹிரு குமார 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
225 ஓட்டங்கள் பின்னிலையில் இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணிஇ 180 ஓட்டங்களுக்குள் சுருண்டது. இதனால் தென்னாபிரிக்கா அணி இன்னிங்ஸ் மற்றும் 45 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.
இலங்கை அணி சார்பில் அதிகப்பட்ச ஓட்டங்களாகஇ குசல் பெரேரா 64 ஓட்டங்களையும் வனிந்து ஹசரங்க 59 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
தென்னாபிரிக்கா அணியின் பந்துவீச்சில்இ லுங்கி இங்கிடிஇ முல்டர் மற்றும் சிபம்லா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் நோட்ஜே 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இந்தப் போட்டியில் இலங்கை அணியின் நான்கு வீரர்கள் (தனஞ்சய டி சில்வாஇ கசுன் ராஜிதஇ லஹிரு குமார மற்றும் வனிந்து ஹசரங்க) ஆகியோர் உபாதைக்குள்ளாகினர். இதில் முதல் இன்னிங்ஸில் 79 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில் உபாதைக் காரணமாக வெளியேறிய தனஞ்சய டி சில்வா அதன்பிறகு களமிறங்கவில்லை.
குறிப்பாக இரண்டாவது டெஸ்ட் போட்டியில் கசுன் ராஜித லஹிரு குமார மற்றும் தனஞ்சய டி சில்வா ஆகியோர் விளையாடுவது சந்தேகத்திற்கிடமாகியுள்ளது.
இப்போட்டியின் ஆட்டநாயகனாக 1 ஓட்டத்தினால் தனது முதல் இரட்டை சதத்தை தவறவிட்ட தென்னாபிரிக்கா வீரர் டு பிளெஸிஸ் தெரிவு செய்யப்பட்டார்.
இரு அணிகளுக்கிடையிலான இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டி எதிர்வரும் ஜனவரி மாதம் 3ஆம் திகதி ஜோகனஸ்பர்க் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
Post a Comment