ஒன்றுபட்டு தமிழ் அரசியல் கைதிகளை சிறைமீட்க வலியுறுத்தி தொடரும் சந்திப்பு! - Yarl Voice ஒன்றுபட்டு தமிழ் அரசியல் கைதிகளை சிறைமீட்க வலியுறுத்தி தொடரும் சந்திப்பு! - Yarl Voice

ஒன்றுபட்டு தமிழ் அரசியல் கைதிகளை சிறைமீட்க வலியுறுத்தி தொடரும் சந்திப்பு!

நீதியற்ற முறையில் சிறை வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளை சிறை மீட்கும் விடயத்தில் ஒன்றுபடுமாறு அரசியல் கட்சி தலைவர்களையும் ஆன்மீகத் தரப்பினரையும் தமிழ் அரசியல் கைதிகளின் உறவுகள் நேரில் சந்தித்து வலியுறுத்தி வருகின்றனர்.

தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டு வரும் குரலற்றவர்களின் குரல் அமைப்பின் ஏற்பாட்டில் கடந்த தினங்களாக அரசியல் கட்சி தலைவர்களையும் ஆன்மீகத் தரப்பினரையும் சந்தித்து வருகின்றனர்.

நேற்றைய (டிச-27) நாளிலும் அரசியல் கட்சி தரப்பினரை நேரில் சந்தித்து குறித்து விடயம் தொடர்பில் அரசியல் கைதிகளின் உறவுகளினால் வலியுறுத்தப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்தன், வடமாகாண சபை முன்னாள் உறுப்பினர் பா.கஜதீபன் மற்றும் ரெலோ தரப்பில் முன்னாள் மாகாண சபை உறுப்பினரும், ரெலோ அமைப்பின் இளைஞர் அணித் தலைவருமான சபா.குகதாஸ் ஆகியோரை நேரில் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

தற்போதைய கொரோனா அச்சுறுத்தல் நிலையில் சிறைச்சாலைகளிலுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் பாதுகாப்பை உடனடியாக உறுதிப்படுத்தக் கோரியும், அவர்களின் விடுதலையை வலியுறுத்தியும் குரலற்றவர்களின் குரல் அமைப்பினால் கடந்த நாட்களில் தொடரச்சியாக தமிழ் அரசியல் தரப்புகளையும், ஆன்மீகத் தரப்பினரையும் நேரில் சந்தித்து வலியுறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.0/Post a Comment/Comments

Previous Post Next Post