கொரோனாவிற்கு மருந்து கண்டுபிடித்ததாகக் கூறும் நபரின் வீட்டின் முன்னாள் திரண்ட மக்கள் - Yarl Voice கொரோனாவிற்கு மருந்து கண்டுபிடித்ததாகக் கூறும் நபரின் வீட்டின் முன்னாள் திரண்ட மக்கள் - Yarl Voice

கொரோனாவிற்கு மருந்து கண்டுபிடித்ததாகக் கூறும் நபரின் வீட்டின் முன்னாள் திரண்ட மக்கள்


கேகாலை, ஹெட்டிமுல்ல பகுதியில் அண்மையில் கொரோனாவுக்கு ஆயுர்வேத மருந்து பாணம் தயாரித்ததாக கூறிய தம்மிகா பண்டாராவின் வீட்டுக்கு  முன்பாக பலர்  கூடியுள்ளனர். 

 இன்று(8) இலவசமாக 5000 குடும்பங்களுக்கு கொரோனா (மருந்து) பானம் வழங்குவதாக அறிவித்தக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி மக்களால் அங்கு பாரிய நெரிசில் காணப்படுகின்றது. 

கொரோனாவை கட்டுப்படுத்த தான் கண்டுபிடித்துள்ள ஆயுர்வேத பானம் வெற்றியளித்துள்ளதாக அண்மையில் குறிப்பிட்ட மருத்துவர் அறிவித்திருந்தமை குறிப்பிடதுடன் சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சியும் அதனை பருகி சோதனைசெய்தார்.

தம்மிகா பண்டாரா ஒரு காளி கோவிலை வைத்துள்ளதுடன் தனக்கு காளி கனவில் வந்து அருளியதாக கூறியமையும் குறிப்பிடத்தக்கது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post