-மூளாய் கூட்டுறவு வைத்தியசாலை- தனிமைப்படுத்தப்பட்டவர்களில் எவருக்கும் தொற்று இல்லை - Yarl Voice -மூளாய் கூட்டுறவு வைத்தியசாலை- தனிமைப்படுத்தப்பட்டவர்களில் எவருக்கும் தொற்று இல்லை - Yarl Voice

-மூளாய் கூட்டுறவு வைத்தியசாலை- தனிமைப்படுத்தப்பட்டவர்களில் எவருக்கும் தொற்று இல்லை
மூளாய் கூட்டுறவு வைத்தியசாலை பணியாளர்களில் எவருக்கும் கொரோனா தொற்று இல்லை என உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதையடுத்து நாளைய தினம் வைத்தியசாலையின் பணிகள் வழமைக்கு திரும்பவுள்ளது. 

காரைநகர் கொரோனா தொற்றுக்குள்ளான நபர் மூளாய் கூட்டுறவு வைத்தியசாலையிலும் கிசிச்சை பெற்றார் என்ற அடிப்படையில் வைத்தியசாலைப் பணியாளர்கள் தனிமைப்படுத்தப்பட்டதுடன் வைத்தியசாலையும் மூடப்பட்டது. 

தனிமைப்படுத்தப்பட்ட 41 பேரிடம் நேற்று செவ்வாய்க்கிழமை பி.சி.ஆர் பரிசோதனைகளுக்கான மாதிரிகள் பெறப்பட்டு இன்று பி.சி.ஆர் பரிசோதனை இடம்பெற்றது. இதன்போது எவருக்கும் கொரோனா தொற்று இல்லை என உறுதிசெய்யப்பட்டுள்ளது. 

காரைநகர் பிரதேசத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கும்  தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது. 

பி.சி.ஆர் முடிவுகள் வெளியாகியதை அடுத்து வலி.மேற்கு பிரதேச சபை நாளைய தினம் மூளாய் கூட்டுறவு வைத்தியசாலையில் தொற்றுநீக்கும் பணியை முன்னெடுக்கவுள்ளது. 

இதையடுத்து வைத்தியசாலையில் வழமைபோன்று சிகிச்சைகள் ஆரம்பமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post