மனித உரிமைகள் தினத்தில் யாழில் கதறிய உறவுகள் - Yarl Voice மனித உரிமைகள் தினத்தில் யாழில் கதறிய உறவுகள் - Yarl Voice

மனித உரிமைகள் தினத்தில் யாழில் கதறிய உறவுகள்



சா்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோா் தினமான இன்று காணாமல் ஆக்கப்பட்டவா்களின் உறவினா்கள் யாழ்.நாவலா் வீதியில் உள்ள ஐ.நா அலுவலகம் முன்பாக கவனயீா்ப்பு போராட்டம் ஒன்றை நடத்தியிருக்கின்றனா். 

இன்று காலை 9 மணி தொடக்கம் காணாமல் ஆக்கப்பட்டவா்களின் உறவினா்கள் இந்த கவனயீா்ப்பு போராட்டத்தினை நடத்தியிருந்ததுடன், மகஜா் ஒன்றையும் ஐ.நாவுக்கு கையளித்திருக்கின்றனா். 

போராட்டத்தின்போது கதறி அழுத காணாமல் ஆக்கப்பட்டவா்களின் உறவினா்கள் ”சா்வதேச விசாரணை மேற்கொள்ளப்பட்டு உண்மைகளை வெளிப்படுத்துங்கள் எனவும், உண்மைகளை கண்டறிந்து சொல்லாவிட்டால் நாங்களே தற்கொலை செய்வோம்.

இல்லையென்றால் எங்கள் மீது குண்டுகளை போட்டு கொலை செய்துவிடுங்கள்” என கதறி அழுதனா். இன்றைய போராட்டத்தில் கொரோனா பரவல் காரணமாக குறைந்தளவு மக்களே கலந்துகொண்டிருந்தனா். 

மேலும் மாகாணசபை முன்னாள் உறுப்பினா் எம்.கே.சிவாஜிலிங்கம் கலந்துகொண்டு ஆதரவளித்தாா். ஆா்ப்பாட்டம் நிறைவடைந்த பின்னா் பொலிஸாா் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்தனா்.







0/Post a Comment/Comments

Previous Post Next Post