யாழ்ப்பாணத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி - Yarl Voice யாழ்ப்பாணத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி - Yarl Voice

யாழ்ப்பாணத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி
யாழ்ப்பாணத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

யாழ் போதனா வைத்தியசாலை  மற்றும் யாழ் பல்கலைக்கழக  மருத்துவபீட ஆய்வுகூடங்களில் இன்றையதினம் 607 பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப் பட்டதாகவும், இதில் உடுவிலில் பகுதியை சேர்ந்த ஒருவருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டதாகவும் த.சத்தியமூர்த்தி மேலும் தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் மருதனார்மடம் கொரோனா கொத்தணியில் தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 131 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post