தென்மராட்சியில் இடம்பெற்ற விபத்தில் சிறுவன் உட்பட இருவர் உயிரிழப்பு - மூவர் படுகாயம் - Yarl Voice தென்மராட்சியில் இடம்பெற்ற விபத்தில் சிறுவன் உட்பட இருவர் உயிரிழப்பு - மூவர் படுகாயம் - Yarl Voice

தென்மராட்சியில் இடம்பெற்ற விபத்தில் சிறுவன் உட்பட இருவர் உயிரிழப்பு - மூவர் படுகாயம்
யாழ்.தென்மராட்சி நுணாவில் A9 வீதியில் கார் ஒன்றின் ரயர் வெடித்து விபத்துக்குள்ளானதில் நான்கு வயதுச் சிறுவன் உட்பட இருவர் உயிரிழந்துள்ளதோடு,மூவர் படுகாயமடைந்துள்ளனர். 

யாழ்ப்பாணத்திலிருந்து சாவகச்சேரி நோக்கியப் பயணித்த  கார் ஒன்றின் ரயர் வெடித்து, திருத்த வேலைக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த எரிபொருள் தாங்கி வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளானது.

சம்பவநேரத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு சிறுவர்கள் உட்பட  ஐவர் காரில் பயணித்துள்ளனர்.

அவர்களில் நான்கு வயதுடைய சிறுவன், 35 வயதுடைய  பெண் ஆகியோர் இந்த விபத்தில் உயிரிழந்துள்ளார்.

ஏனையவர்கள் மூவரும் படுகாயமடைந்த நிலையில், யாழ்.போதனா வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post