யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு கூட்டம் பெப்ரவரி 2 நடைபெறும் - Yarl Voice யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு கூட்டம் பெப்ரவரி 2 நடைபெறும் - Yarl Voice

யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு கூட்டம் பெப்ரவரி 2 நடைபெறும்யாழ் மாவட்டத்திற்கான அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டம் எதிர்வரும் பெப்ரவரி மாதம் இரண்டாம் திகதி (02) செவ்வாய்கிழமை காலை 9.00 மணிக்கு யாழ் மாவட்டசெயலக கேட்போர் கூடத்தில் யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுத்தலைவரும் பாராளுமன்ற குழுக்களின் பிரதி தவிசாளருமான அங்கஜன் இராமநாதன் தலைமையில் வடமாகாண ஆளுனர் திருமதி பி. எஸ். எம் சாள்ஸ், யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிபிள்ளை மகேசன் ஆகியவர்களின் இணைப் பங்கேற்புடனும் இடம்பெறும்.

இந்த கூட்டத்தொடரிற்கு யாழ் ,கிளிநொச்சி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், அரச உயர் அதிகாரிகள், கல்வி சுகாதார போக்குவரத்து நிலை சார்அதிகாரிகள், திணைக்களங்களின் தலைவர்கள், அமைச்சுக்களின் பிரதிநிதிகள், அரச உத்தியோகத்தர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், ஊடகவியளார்கள் என்போருக்கு Covid -19 சுகாதார நடைமுறைக்கு அமைவாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


0/Post a Comment/Comments

Previous Post Next Post