கருணாவை கூட்டமைப்பில் இணைப்பது சாத்தியப்படாது - சிவஞானம் தெரிவிப்பு - Yarl Voice கருணாவை கூட்டமைப்பில் இணைப்பது சாத்தியப்படாது - சிவஞானம் தெரிவிப்பு - Yarl Voice

கருணாவை கூட்டமைப்பில் இணைப்பது சாத்தியப்படாது - சிவஞானம் தெரிவிப்பு




விநாயகமூர்த்தி முரளிதரன் எனப்படும் கருணாவை தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணைப்பது என்பது சாத்தியப்படாத ஒரு விடயம் என வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சிவஞானம் தெரிவித்தார்.

 இன்று யாழில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்

நேற்றைய தினம் கிளிநொச்சியில் விநாயகமூர்த்தி முரளிதரன் தான் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து செயற்படவுள்ளதாகவும் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவுடன் தனக்கு நெருங்கிய தொடர்பு காணப்படுவதாகவும் தெரிவித்திருந்ததார்.

இந்நிலையில்  இன்றைய தினம் ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த சிவஞானம்  கருணா கூட்டமைப்புடன் இணைந்து செயற்பட விரும்புவதாக தெரிவித்தாரே தவிர கூட்டமைப்பு அவரை இணைத்துக் கொள்ளும் எந்த ஒரு தீர்மானமும் எடுக்கவில்லை அவரை  கூட்டமைப்புடன்இணைப்பது என்பது சாத்தியப்படாத ஒரு விடயம் எனவும் தெரிவித்திருந்தார்

0/Post a Comment/Comments

Previous Post Next Post