யாழ் பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்ற வாகன பரிசோதனை - Yarl Voice யாழ் பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்ற வாகன பரிசோதனை - Yarl Voice

யாழ் பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்ற வாகன பரிசோதனை
யாழ்ப்பாண பொலிஸ் நிலைய வருடாந்த வாகன பரிசோதனை நிகழ்வு இன்றைய தினம் இடம்பெற்றது 

யாழ்ப்பாண பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரசாத் பெர்னான்டோதலைமையில் இடம்பெற்ற வாகன பரிசோதனை நிகழ்வில்
யாழ்ப்பாணம்பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரணவில் வாகன பரிசோதனை நிகழ்வில் கலந்துகொண்டு யாழ்ப்பாண பொலிஸ் நிலைய வாகனங்களை பரிசோதித்தார் 

பொலிஸ் திணைக்களத்தினால் வருடம்தோறும் போலீஸ் நிலையங்களில் அணிவகுப்பு பரிசோதனை மற்றும் வருடாந்த வாகன பரிசோதனைகள் இடம்பெற்றுவரும் நிலையில் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தின் வாகன பரிசோதனை நிகழ்வு இன்றுகாலை  தற்போதைய கொரோனா நிலைமையை கருத்தில் கொண்டு ஒன்றுகூடல்களை தவிர்த்து சுகாதார நடைமுறைகளை பின்பற்றி இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது0/Post a Comment/Comments

Previous Post Next Post