நெடுந்தீவு வெடியரசன் கோட்டையை பன்சலையாக்க நினைத்தால்... எதிர் நகர்வுகளை மேற்கொள்வோம் - விந்தன் சூளுரைப்பு - Yarl Voice நெடுந்தீவு வெடியரசன் கோட்டையை பன்சலையாக்க நினைத்தால்... எதிர் நகர்வுகளை மேற்கொள்வோம் - விந்தன் சூளுரைப்பு - Yarl Voice

நெடுந்தீவு வெடியரசன் கோட்டையை பன்சலையாக்க நினைத்தால்... எதிர் நகர்வுகளை மேற்கொள்வோம் - விந்தன் சூளுரைப்பு



சப்த தீவுகளில் ஒன்றான நெடுந்தீவில் உள்ள வெடியரசன் கோட்டை பௌத்த பன்சலையாக்க நினைத்தால் சமூக அமைப்புகளை ஒன்று திரட்டி எதிர் நகர்வுகளை மேற்கொள்வேம் என முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினரும் ரெலோ அமைப்பின் முக்கியஸ்தருமான விந்தன் கனகரட்ணம் தெரிவித்தார்.

யாழ் ஊடக அமையத்தில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் பூர்வீக தமிழர் பிரதேசமான நெடுந்தீவில் சுமார் 25 கிராமங்களை உள்ளடக்கிய 6கிராமசேவையாளர் பிரிவுகளில் சுமார் 6ஆயிரம்பேர் வசித்து வருகின்றனர்.

நெடுந்தீவை ஆண்ட தமிழ் மன்னன் வெடியரசன் ஒல்லாந்தர் போர்த்துக்கேயருக்கு எதிராக போர் தொடுப்பதற்காக நெடுந்தீவின் மேற்குப் பகுதியில் உள்ள குருக்கள்மடம் என்ற பகுதியில் அவனது கோட்டைய அமைத்தாக வரலாறுகள் கூறுகின்றன.

தற்போது அக் கோட்டை  சிதை அடைந்துள்ள நிலையில் அதனை பௌத்தர்கள் வாழ்ந்த இடமாக காட்சிப்படுத்த சில பொளத்த துறவிகளும் தொல்லியல் திணைக்கள அதிகாரிகளும் முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

இதன் ஒரு அங்கமாக கடந்த மாத இறுதியில் கொழும்பிலிருந்து தொல்லியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் மற்றும் கண்டியைச் சேர்ந்த பௌத்த துறவி ஒருவரும் குறித்த பகுதிக்கு விஜயம் செய்து பார்வையிட்டுள்ளனர்.

இவ்விடயம் தொடர்பில் நெடுந்தீவு சமூக கட்டமைப்புகள் விழிப்படைந்துள்ள நிலையில் வெடியரசன் கோட்டை பௌத்த அடையாள  இடமாக திரிபுபடுத்த முனைந்தால் மக்களைத் திரட்டி அதனை தடுப்பதற்கு அஞ்ச மாட்டோம்
.
நெடுந்தீவு பிரதேச செயலகத்தில் வெடியரசன் கோட்டை தொடர்பான வரலாறுகள் தெளிவாக குறிப்பிடப் பட்டுள்ள நிலையில் வரலாறுகளை மாற்றுவதற்கு திரிவுபடுத்துவதற்கோ நாம் அனுமதிக்கப் போவதில்லை

ஆகவே எமது போராட்டத்திற்கு நயினாதீவு விகாராதிபதியும் தனது பூரண ஆதரவை தருவதாகவும் வரலாறுகளை திரிவுபடுத்துவதற்கு தாமும் எதிராக போராடுவதற்கு தயாராக இருக்கிறேன் என உறுதிமொழி தந்துள்ளார் என அவர் மேலும் தெரிவித்தார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post