அவுஸ்ரேலியாவில் அவசர பயன்பாட்டுக்காக பைசர் பயன்படுத்த அனுமதி - Yarl Voice அவுஸ்ரேலியாவில் அவசர பயன்பாட்டுக்காக பைசர் பயன்படுத்த அனுமதி - Yarl Voice

அவுஸ்ரேலியாவில் அவசர பயன்பாட்டுக்காக பைசர் பயன்படுத்த அனுமதி


அவுஸ்ரேலியாவில் அவசர பயன்பாட்டுக்காக பைசர் கொரோனா தடுப்பூசியை பயன்படுத்த அவுஸ்திரேலிய மருத்துவ சபை இன்று அனுமதியளித்துள்ளது.

அதன்படி பைசர் நிறுவனத்திடம் இருந்து 10 மில்லியன் தடுப்பூசிகளை பெறவுள்ளதாகவும் அவுஸ்ரேலிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.

அத்தோடு அடுத்த மாதத்தின் இறுதியில் கொரோனா தடுப்பூசி மக்களுக்கு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக அவுஸ்திரேலிய பிரதமர் ஸ்கொட் மொரிசன் அறிவித்துள்ளார்.

தடுப்பூசி உற்பத்தியாளர்கள் எதிர்கொள்ளும் உலகளாவிய விநியோக சிக்கல்கள் ஏற்கனவே அவுஸ்ரேலிய விநியோகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன என்றும் பிரதமர் ஸ்கொட் மொரிசன் தெரிவித்துள்ளார்.

அவுஸ்ரேலியாவில் கொரோனா தொற்று கட்டுப்பாட்டில் உள்ள நிலையில் அந்நாட்டு அரசாங்கத்தினால் பயன்படுத்த அனுமதிக்கப்பட்ட முதல் கொரோனா தடுப்பூசி இதுவென்பதும் குறிப்பிடத்தக்கது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post