யாழ் சிவில் சமூகத்தினரின் ஏற்பாட்டில் யாழ் நகரில் இன்றைய தினம் தமிழ் தேசிய கட்சிகளுக்கு எதிராக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
ஜெனிவா கூட்டத்தொடர் ஆரம்பமாகவுள்ள நிலையில் தமிழ் கட்சிகள் பக்கசார்பாக செயற்பட்டு வருவதாகவும் குறிப்பாக ஜெனிவாவில் தமிழீழ விடுதலைப் புலிகள் மற்றும் ஆயுதக் குழுக்களால் மேற்கொள்ளப்பட்ட கடத்தல் கொலை விடயங்களும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட வேண்டிய விடயம் என கட்டாயமாக சுட்டிக் காட்டப்பட வேண்டும் எனவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
அத்தோடு குறித்த விடயம் தொடர்பில் தமிழ் கட்சிகள் எந்தவித கரிசனையும் செலுத்துவது இல்லை எனவும் எனவே இந்த நாட்டில் தமிழ் கட்சிகள் ஜனநாயக ரீதியாக செயலபடவில்லை என தெரிவித்து தமிழ் கட்சிகள் தமிழ் மக்களை ஏமாற்றி வருவதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
Post a Comment