யாழ் சிறைச்சாலையில் விருந்தினர் விடுதி திறந்து வைப்பு - Yarl Voice யாழ் சிறைச்சாலையில் விருந்தினர் விடுதி திறந்து வைப்பு - Yarl Voice

யாழ் சிறைச்சாலையில் விருந்தினர் விடுதி திறந்து வைப்பு
யாழ் சிறைச்சாலை வளாகத்துக்குள் அமைக்கப்பட்ட சிறைச்சாலை விருந்தினர் விடுதி நேற்றிரவு சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் உப்பிலி தெனிய வினால் வைபவரீதியாக நாடாவெட்டிதிறந்துவைக்கப்பட்டது

 ஏனைய சிறைச்சாலைகளில் உள்ள உத்தியோகத்தர்கள் யாழ் மாவட்டத்திற்கு வருகை தரும்போது பயன்படுத்துவதற்காக அமைக்கப்பட்ட இந்த விடுதியானது  நேற்று இரவு சம்பிரதாயபூர்வமாக சிறைச்சாலைகள் ஆணையாளரால் பெயர்ப்பலகை திரைநீக்கம் செய்து வைக்கப்பட்டு நாடா வெட்டி திறந்து வைக்கப்பட்டது


"யாழ் லகூன் " என்ன பெயரிடப்பட்டுள்ள குறித்த விருந்தினர் விடுதி  ஏனைய சிறைச்சாலைகளில் உள்ள சிறைச்சாலை அதிகாரிகள் உத்தியோகத்தர்கள் யாழ்ப்பாணத்திற்கு வருகை தரும்போது குறித்த விடுதியினை பயன்படுத்த முடியும் எனவும் நவீன வசதிகளுடன் குறித்த விடுதியானது அமைக்கப்பட்டு திறந்து வைக்கப் பட்டுள்ளதாகவும் யாழ்ப்பாண சிறைச்சாலையின்  அத்தியட்சகர் தெரிவித்தார்

 குறித்த விருந்தினர் விடுதி திறப்பு நிகழ்வில்
சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் உப்புல் தெனிய, யாழ்ப்பாண சிறைச்சாலை அத்தியட்சகர் மொகான் கருணாரட்ன சிறைச்சாலையின் பிரதமை ஜெயிலர் ஹேரத ஆகியோர் மற்றும் சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர் தற்போதுள்ள கொரோனாநிலைமை காரணமாக மட்டுப்படுத்தவர்களுடன்சுகாதார நடைமுறைகளை பின்பற்றி குறித்த திறப்புவிழா இடம்பெற்றது

0/Post a Comment/Comments

Previous Post Next Post