மீண்டும் கவுதம் மேனன் இயக்கத்தில் நடிக்கும் சிம்பு - அதிகாரப்பூர்வ அறிவிப்பு - Yarl Voice மீண்டும் கவுதம் மேனன் இயக்கத்தில் நடிக்கும் சிம்பு - அதிகாரப்பூர்வ அறிவிப்பு - Yarl Voice

மீண்டும் கவுதம் மேனன் இயக்கத்தில் நடிக்கும் சிம்பு - அதிகாரப்பூர்வ அறிவிப்பு


மீண்டும் கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிக்க இருப்பதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறார்கள்.

கவுதம் மேனன் இயக்கத்தில் வெளியான 'விண்ணைத்தாண்டி வருவாயா' காதலர்களின் பாராட்டுக்களை குவித்தது. சிம்புஇ திரிஷாவுக்கு இந்த படம் நல்ல பெயரை பெற்று தந்தது.

 அதனைத்தொடந்து சிம்புஇ கவுதம் மேனன் கூட்டணியில் 'அச்சம் என்பது மடமையடா' என்ற திரைப்படம் வெளியானது. இப்படமும் சூப்பர் ஹிட்டானது.

இந்நிலையில்இ தற்போது 'மாநாடு'இ 'பத்துதல' படங்களில் நடித்துவரும் சிம்பு மீண்டும் கவுதம் மேனன் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார்.

இப்படத்தை வேல்ஸ் இன்டர்நேஷனல் பிலிம்ஸ் சார்பில் ஐசரி கணேஷ் தயாரிக்கிறார். இதற்கான அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக வேல்ஸ் நிறுவனம் தனது சமூக வலைத்தள பக்கத்தில் அறிவித்துள்ளது. 

மீண்டும் இக்கூட்டணி ஹாட்ரிக் வெற்றி கொடுக்கும் என ரசிகர்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகிறார்கள். இது சிம்புவின் 47 வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post