இந்திய மீனவர்களின் அத்துமீறல்களை கண்டித்து யாழில் போராட்டம் - Yarl Voice இந்திய மீனவர்களின் அத்துமீறல்களை கண்டித்து யாழில் போராட்டம் - Yarl Voice

இந்திய மீனவர்களின் அத்துமீறல்களை கண்டித்து யாழில் போராட்டம்
இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி தொழிலில் ஈடுபடுவதை  இந்திய மீனவர்கள் நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தியும்,  இலங்கை அரசிடம் நீதி கோரியும் யாழ்ப்பாணம் மாவட்ட கடற்தொழிலாளர்கள் மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணியை முன்னெடுத்துள்ளனர்.

யாழ்ப்பாணம் பண்ணையில் அமைந்துள்ள கடற்தொழில், நீரியல் வளத் திணைக்கள முன்றலில்  இன்று முற்பகல் 10.45 மணியளவில் ஆரம்பமான பேரணி யாழ்ப்பாணம் மாநகரம் ஊடாக ஸ்ரானி வீதியில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் அலுவலகத்தை வந்தடைந்தது.

அங்கு போராட்டக்காரர்கள் தமது கோரிக்கை மனுவை கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post