கஜேந்திரகுமார் ஏற்றுக் கொள்வதை எவ்வாறு சுமந்திரன் ஏற்றுக்கொள்கிறார் - சுமந்திரன் ஏற்றுக் கொள்வதை எவ்வாறு கஜேந்திரகுமார் ஏற்று கொள்கிறார் என சுரேஷ் கேள்வி - Yarl Voice கஜேந்திரகுமார் ஏற்றுக் கொள்வதை எவ்வாறு சுமந்திரன் ஏற்றுக்கொள்கிறார் - சுமந்திரன் ஏற்றுக் கொள்வதை எவ்வாறு கஜேந்திரகுமார் ஏற்று கொள்கிறார் என சுரேஷ் கேள்வி - Yarl Voice

கஜேந்திரகுமார் ஏற்றுக் கொள்வதை எவ்வாறு சுமந்திரன் ஏற்றுக்கொள்கிறார் - சுமந்திரன் ஏற்றுக் கொள்வதை எவ்வாறு கஜேந்திரகுமார் ஏற்று கொள்கிறார் என சுரேஷ் கேள்வி




நாங்கள் மாத்திரம் தமிழ்த்தேசியவாதிகள். நாங்கள் தான் இலங்கையில் இனப்படுகொலை இடம்பெற்றது என்பதை உலகம் முழுவதும் கூறிவந்தோம்;; எனக்கூறுபவர்கள் ஏன் ஜநா மனித உரிமைகள் ஆணையகத்திற்கென தமிழ் கட்சிகள் சார்பில் முதலில் வரைபு தயாரிக்கின்றபோது இனப்படுகொலை இடம் பெற்றது என்பதை கூறவோ அதனை உள்ளடக்கவோ முன்வரவில்லையென கேள்வி எழுப்பியுள்ளார் க.சுரேஸ்பிறேமச்சந்திரன்.

யாழ்.ஊடக அமையத்தில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் ஊடகவியலாளர்களால் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றிற்கு பதிலளித்த அவர் அதற்குப் பிற்பாடு எங்களுடைய தரப்பில் இருந்து இனப்படுகொலை என்பது பிரேரணையில் கொண்டு வரப்படவேண்டும் என்று கூறிய பிற்பாடு தான் பலருடைய உண்மையான முகங்கள் தெரிந்தது.

குறிப்பாக சர்வதேச குற்றவியல் நீதிமன்றிற்கு பொறுப்புக்கூறல் விசாரணைக்கு இவ்விடயத்தை கொண்டு செல்லவேண்டுமாக இருந்தால் இது தொடர்பில் எவ்விதமான விசாரணையை குற்றவியல் நீதிமன்றுக்கு கொண்டு செல்வது  என்பது முக்கியமானது.

நாம் அடிக்கடி கூறுவது போன்று யுத்ததிற்கு எதிராக குற்றங்கள் ,மனித குலத்திற்கு எதிரான குற்றங்களை விசாரிப்பது போன்ற விடயங்களை விசாரிப்பதற்கு இலங்கையில் இனப்படுகொலை இடம்பெற்றமை அதற்கான மூலகாரணம் யார் என்பது விசாரிக்கப்பட்டால் தான் இலங்கை தமிழ் மக்கள் இன்னொரு இன அழிப்பில் இருந்து பாதுகாக்கமுடியும் .

ஆகவே இன அழிப்பு என்பது சேர்க்கப்பட வேண்டும் என்று கூறியதற்கு பின்னர் தான் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஏற்றுக்கொள்கின்றேன் தனக்கு பிரச்சினை இல்லை எனவும் அதன் பின்னர் எம்.ஏ.சுமந்திரன் எனக்கு உடன்பாடில்லை ஆனால் இதனை ஏற்றுக்கொள்கின்றேன் என முன்வந்திருந்தனர்.

அதுபோல சர்வதேச குற்றவியல் பொறிமுறை(ஐஐஐஆ) எனக்கூறப்படுகின்ற சிரியா நாட்டுக்கு எதிரான சாட்சியங்களைச் சேர்ப்பது போன்ற விடயங்கள் எமக்கும் வேண்டும் எனக்கேட்டபோது அதனைக்கொண்டு வநால் அது சர்வதேச குற்றவியல் நீதிமன்றுக்கு செல்லாது அதனைக் கைவிடவேண்டும் என வாதிட்டனர்.

பின்னர் ஒருவாறாக ஒரு வருட கால அவகாசத்துடன் அதனை ஏற்றுக் கொள்கின்றோம் என கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஏற்றுக்கொண்டார் அதற்கு எம்.ஏ.சுமந்திரன்; அவ்வாறாயின் தானும் ஏற்றுக்கொள்வதாக கூறினார். கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஏற்றுக்கொள்வதை எவ்வாறு எம்.ஏ.சுமந்திரன் ஏற்றுக்கொள்கிறார் என்பது எமக்குப் புரியவில்லை. 

ஆனால் அத்தகைய விடயங்கள் நடந்து முடிந்த பிற்பாடு கட்சித் தலைமைகளின் கையொப்பத்தில் பிரச்சினை ஏற்பட்டிருந்தது.
இது சிறுபிள்ளைத்தனமான செயற்பாடாகத்தான் இருந்தது. கட்சிகள் என்று பார்க்கும் போது இலங்கை தமிழரசுக் கட்சி மிகப்பழமையான கட்சி. ஆயுதம் எடுத்தப் போராடியவர்கள் என்றால் ஈ.பி.ஆர்.எல்.எவ் , ரெலோ ,புளொட் என்பவை இருக்கின்றன.அவர்களிற்கு பல அனுபவங்கள் உள்ளன.

இந்நிலையில் நேற்று வந்தவர்கள் தான் கையொப்பம் இடலாம் என்றால் இது எவ்வளவு தூரம் சரியானது . சி.வி.விக்கினேஸ்வரன் ,எம்.ஏ.சுமந்திரன் மற்றும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஏற்றுக்கொண்டார்களாம். அவ்வாறு இருந்தாலும் அதில் ஏனையவர்களை இணைப்பது என்ன தவறு.

 அதில் ஈடுபட்டுவர்களை இணைத்துக் கொள்வதறன் ஊடாகத்தான் அந்த ஆவணத்திற்கு கனதி கூடும.; ஆனால் அவர்கள் சம்மதிக்கவில்லை. இதுதான் இவர்களின் சிறுபிள்ளைத்தனமான வேலையாகவுள்ளது .சிவில் அமைப்புக்களில் இருந்து கையெப்பத்தை பெற்றுக்கொள்ளமுடியும் என்றால் கட்சித் தலைவர்களின் கையெப்பத்தை ஏற்றுக்கொள்வது என்ன தவறு.

கால அவகாசம் வழங்கப்படவேண்டும் என்பது கூட ஏற்றுக்கொள்ளப்படமுடியாதது. இதேவேளை ஐ.நா.மனித உரிமைக்காக தயாரிக்கப்பட்ட அறிக்கை அனுப்பப்பட்டதாக கூறப்படுகின்றது. ஆனால் யார் அதனை அனுப்பியதாகத் தெரியவில்லை. ஆனால் அனுப்பப்பட்டதாக கூறுகின்றார். அதனை நாம் நம்புகின்றோம் எனவும் சுரேஸ்பிறேமச்சந்திரன் தெரிவித்தார்.




0/Post a Comment/Comments

Previous Post Next Post