நல்லாட்சியில் விகாரை அமைக்க கையுயர்த்தியவர்கள் இன்று புலம்புவது வேடிக்கையாக உள்ளது - வலி வடக்கு ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் சுட்டிக்காட்டு! - Yarl Voice நல்லாட்சியில் விகாரை அமைக்க கையுயர்த்தியவர்கள் இன்று புலம்புவது வேடிக்கையாக உள்ளது - வலி வடக்கு ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் சுட்டிக்காட்டு! - Yarl Voice

நல்லாட்சியில் விகாரை அமைக்க கையுயர்த்தியவர்கள் இன்று புலம்புவது வேடிக்கையாக உள்ளது - வலி வடக்கு ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் சுட்டிக்காட்டு!



வடக்கு கிழக்கில் ஆயிரம் விகாரைகள் அமைக்கப்படும் என தேர்தல் விஞ்ஞாபனத்தில் சொல்லப்பட்ட பின்னரும் அந்த ஆட்சிக்கு துணைநின்றவர்கள் இன்று விகாரைகள் அமைக்கப்படுவது தொடர்பில் நீலிக்கண்ணீர் வடித்துக்கொண்டிருப்பது வேடிக்கையாக உள்ளது என கடற்றொழில் அமைச்ர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் பிரதிநிதியாக வலிகாபமம் வடக்கு பிரதேச ஒருங்கிணைப்ப குழு கூட்டத்தில் கலந்துகொண்ட ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாவட்ட உதவி நிர்வாக செயலாளர் ஐயாத்துரை ஶ்ரீரங்கேஸ்வரன் சுட்டிக்காட்டியுள்ளர்.

வலிகாமம் வடக்கு பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இன்று தெல்லிப்பழை பிரதேச செயலக மநாட்டு மண்டபத்தில் ஒருங்கிணைப்ப குழுவின் இணைத்தலைவர் அங்கயன் இராமநாதன் தலைமையில் இடம்பெற்றது.

இதன்போது தொல்லியல் திணைக்களம் அற்றும் வனவளத் திணைக்களங்களின் காணி அபகரிப்ப மற்றுமு; பௌத்த விகாரைகள் அமைக்கப்படுவது தொடர்பில் விவாதத்தத்திற்கு எடுக்கப்பட்டது. தையிட்டி பகுதியில் பௌத்த விகாரை கட்டப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்தார். அதேபோல  அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் இவ்விடயத்தை சுட்டிக்காட்டியிருந்தனர்.

இவ்விடயம் தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயெ அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் பிரதிநிதி ஐயாத்துரை ஶ்ரீரங்கேஸ்வரன் இவ்வாறு சுட்டிக்காட்டியுள்ளார்.

தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில் –

மக்களின் நிலம் மக்களுக்கே சொந்தம். இந்த நிலையில் எந்த மாற்றமும் இல்லை. இதையே நாம் தொடர்ந்தும் வலியுறுத்திவருகின்றோம்.

ஆகவே இந்த ஒரங்கிணைப்பு குழு கூட்டத்தினூடாக மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டும். அதனூடாக மத்திய அரசுக்கு தெரிவிக்க வேண்டிய விடயங்களை வலியுறுத்த வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு என்றும் தெரிவித்தி அவர் கடந்த நல்லாட்சி என்ற சொல்லாட்சி காலத்தில் அதற்கு துணை நின்றவர்கள் இன்று அதை தடுக்க வேண்டும் என்று கூறியவாறு இந்தக் கூட்டத்தில் இன்று கலந்துகொண்டுள்ளனர் என்றும் சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே மயிலிட்டி கடற்றொழிலாளர் இறங்கதுறை விவகாரம் தொடர்பில் ஆராயப்பட்டபோது கடந்த நல்லாட்சியில் என்று சொல்லப்பட்ட சொல்லாட்சி காலத்தில் கடற்றொழில் அமைச்சர் அஹிந்த அமரவீர தலைமையில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் அனுசரணையுடன் மயிலிட்டி துறைமுகம் அபிவிருத்தி செய்வதற்காக அடிக்கல் நாட்டப்பட்டது.

அதன்போது மயிலிட்டி கடற்றொழிலாளர் மக்களுக்கு பல்வேறு உறுதிமொழிகள் வழங்கப்பட்டன.

பின்னர் அதன் திறப்பு விழாவும் நடந்துவிட்டது. ஆனாலும் அன்று கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் எவையும் நிறைவேற்றப்படவில்லை. மயிலிட்டி கடற்றொழிலாளர் சங்கம் தமது சங்க நடவடிக்கைகளை மேற்கொள்ளக்கூட அக்கட்டடத்தில் ஒரு பகுதியேனும் கொடுக்கப்படாத நிலையில் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் காபந்து அமைச்சராக இருந்தபோது தலையிட்டு பல இழுபறிகளின் மத்தியில் அவர்களுக்கு சங்க நடவடிக்கைகளை மேற்கொள்ள ஓர் அறை பெற்றுக்கொடுக்கப்பட்டது.

ஆனாலும் அவர்களுக்கு நல்லாட்சி அரசில் கொடுக்கப்பட்ட வாக்கறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. ஆகவே அவர்களுக்கு கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்ற வலிகாமம் வடக்கு பிரதேச ஒருங்கிணைப்புகுழு  துறைசார் அமைச்சுக்கு வலியுறுத்த வேண்டும் என்றும் சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது

0/Post a Comment/Comments

Previous Post Next Post