யாழில் பொதுச் சந்தைகள் மக்கள் பயன்பாட்டுக்காக மீள திறக்கப்பட்டது - Yarl Voice யாழில் பொதுச் சந்தைகள் மக்கள் பயன்பாட்டுக்காக மீள திறக்கப்பட்டது - Yarl Voice

யாழில் பொதுச் சந்தைகள் மக்கள் பயன்பாட்டுக்காக மீள திறக்கப்பட்டது

கடந்த மாதம் யாழ்ப்பாண மாவட்டத்தில் கொரோனா  அதிகரித்ததன் காரணமாக யாழ் மாவட்டத்தில் உள்ள அனைத்து பொது சந்தைகளும் சுகாதார பிரிவினரால் மூடப்பட்டிருந்த நிலையில் வடக்கு மாகாண சுகாதார திணைக்களத்தின் வழிகாட்டுதலுக்கிணங்க  இன்றைய தினம் வடக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து சந்தைகளும் மக்கள் பயன்பாட்டுக்காக திறக்கப்பட்டுள்ளன

 யாழ் மாவட்டத்திலுள்ள திருநெல்வேலி பொதுச்சந்தை மருதனாரமடம் பொதுச் சந்தை மற்றும் ஏனைய பொதுச் சந்தைகள் இன்றைய தினம் மக்கள் பயன்பாட்டுக்காக திறக்கப்பட்டுள்ளன

  சந்தைகளில் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி சமூக இடைவெளியினை பேணி வியாபார நடவடிக்கையை மேற்கொள்வதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
சந்தைகளில் போலீசார், சுகாதாரப் பிரிவினர் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்

0/Post a Comment/Comments

Previous Post Next Post