முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியே அமைக்கப்படும் வேறு எந்தத் தூபியும் அமைக்க முடியாது - சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் - Yarl Voice முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியே அமைக்கப்படும் வேறு எந்தத் தூபியும் அமைக்க முடியாது - சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் - Yarl Voice

முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியே அமைக்கப்படும் வேறு எந்தத் தூபியும் அமைக்க முடியாது - சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்
யாழ் பல்கலைக்கழகத்தில் மீண்டும் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை அமைக்கப்படுமென்றும் அதனைத் தவிர வேறு எந்த தூபியும் அமைப்பதற்கு இடமளிக்க முடியாது யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

யாழ் ஊடக அமையத்தில் மாணவர் ஒன்றியம் இன்று நடத்திய ஊடக சந்திப்பின் போதே மாணவர் ஒன்றியத்தின் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது...

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இடித்தளிக்கப்பட்டது. இதற்கு எதிராக உள்நாட்டிலும் உலக அரங்கில் இருந்தும் கண்டனங்களும் எதிர்ப்புகளும் ஆதரவுகளும் வெளிப்படுத்தப்பட்டது.

இடிக்கப்பட்ட தூசியை மீள அமைக்க வேண்டும் என வலியுறுத்தி மாணவர்களும் அரசியல்வாதிகளும் அரசியல் கட்சிகளும் இணைந்து தொடர் போராட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர். இதனைத் தொடர்ந்து மாணவர்கள் உண்ணாவிரதப் போராட்டம் ஒன்றை நடத்தியிருந்தனர்.

இந்நிலையில் பல்கலைக்கழக துணைவேந்தர் மீளவும் அமைப்பதற்கு இணக்கம் தெரிவித்து தூபி அமைப்பதற்கான அடிக்கல் நாட்டப்பட்டது ஆயினும் இத் தூபியை மீள்  அமைக்கப்படுவது தொடர்பில் சில சர்ச்சைகளும் வெளிப்படுத்தப்பட்ட வந்தன.

 குறிப்பாக இத் தூபியானது முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி அல்லாமல் பொதுவானது என்றும் சமாதானத் தூபி என்றும் பல கருத்துக்கள் பல செய்திகள் வெளியாகியிருந்த நிலையில் இது தொடர்பில் மாணவர்களிடம் வினவியபோது0/Post a Comment/Comments

Previous Post Next Post