மண்டைதீவில் காணி சுவீகரிப்பிற்கு எதிரான போராட்டத்தில் பதற்றம் - Yarl Voice மண்டைதீவில் காணி சுவீகரிப்பிற்கு எதிரான போராட்டத்தில் பதற்றம் - Yarl Voice

மண்டைதீவில் காணி சுவீகரிப்பிற்கு எதிரான போராட்டத்தில் பதற்றம்




யாழ்ப்பாணம் மண்டைதீவு பகுதியில்  பொதுமக்களின் காணிகளை சுவிகரிப்பதற்கு எதிராக தொடர்ந்தும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

மண்டதீவு ஜே107 கிராமசேவகர் பிரிவிற்கு உட்பட்ட 29 பேரின் 18 ஏக்கர் பரப்பு காணி சுவிகரிப்பதற்காக நில அளவைத் திணைக்களத்தினர் இன்று காலை வருகை தந்திருந்தார்.

 இதன்போது அங்கு திரண்டிருந்த காணி உரிமையாளர்களும் பொது மக்களும் அரசியல்வாதிகளும் இணைந்து கடுமையான எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து நிலஅளவைத் திணைக்களத்தினர் திரும்பிச் சென்றனர்.

இந்நிலையில் மீண்டும் போலீஸ் பாதுகாப்புடன் நில அளவை திணைக்கள அதிகாரிகள் அங்கு வந்து நில அளவீடு செய்ய முயற்சி எடுத்து வருகின்றனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் மீண்டும் பொது மக்களும் அரசியல் பிரமுகர்களும் காணி உரிமையாளர்கள் எதிர்ப்பு வீதி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில்  பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.

இந்தப் போராட்டத்தில் காணி உரிமையாளர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளூராட்சி மன்றங்களின் தவிசாளர்கள் உறுப்பினர்கள் பிரதேச மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

இதேவேளை தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழ் தேசிய மக்கள் முன்னணி தமிழ் மக்கள் தேசிய கூட்டணி ஈழமக்கள் ஜனநாயக கட்சி ஆகிய 4 தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகளும் ஒன்றாக இணைந்து எதிர்ப்பு போராட்ட நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது
.







0/Post a Comment/Comments

Previous Post Next Post