வட மாகாணம் தழுவிய கடையடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு வழங்குமாறு வடமராட்சி கடற்தொழிலாளர் சமாசம் கோரிக்கை - Yarl Voice வட மாகாணம் தழுவிய கடையடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு வழங்குமாறு வடமராட்சி கடற்தொழிலாளர் சமாசம் கோரிக்கை - Yarl Voice

வட மாகாணம் தழுவிய கடையடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு வழங்குமாறு வடமராட்சி கடற்தொழிலாளர் சமாசம் கோரிக்கை
கறுப்புக் கொடிகளை படகுகளில் கட்டியவாறு மீன்பிடிக்க வருவோம் என, இந்திய மீனவர்கள் அறிவித்து உள்ளமையை கண்டித்து, வடமராட்சி வடக்கு கடற்றொழிலாளர்கள் சமாசம் வடக்கு தழுவிய கதவடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு கோருகிறது. 

அதற்கான ஒன்றுகூடல் வடமராட்சி வடக்கு கடற்றொழிலாளர்கள் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசத்தில் இன்று இடம்பெற்ற கூட்டத்திலேயே இத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

எல்லை தாண்டி மீன்பிடியில் இந்திய மீனவர்கள் தொடர்சியாக ஈடுபடுவதறாலேயே வடகடலில் மீனவர்களுக்கிடையே பிரசினைகள் ஏற்ப்படுகிறது. வடக்கு மீனவர்கள் மீது பல தாக்குதல்களை இந்திய மீனவ்ரகளே மேற்கொண்டு வருகின்றனர்.

எல்லையைத் தாண்டும் மீனவர்களை கடற்ப்படை கைது செய்து வருகிறது, இது வரவேற்க்கத்தக்கது. கைது நடவடிக்கை தொடர வேண்டும் என்பது எமது தொடர்சியான கோரிக்கை.

இலங்கை கடற்ப்பரப்பில் அண்மைய நாளில் இடம்பெற்ற படகு விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு எமது அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். அதே வேளை எமது கடற்ப்பரப்பிற்குள் நுளைய வேண்டாம் என, மீண்டும் மீண்டும் கூறுகிறோம்.

சில அசம்பாவிதங்களை வைத்து எமது கடற்ப்பரப்புக்குள் நுளைந்து எமது வளத்தை அழிக்க அனுமதிக்க முடியாது. கறுப்புக் கொடிகளை படகில் கட்டிக் கொண்டு மீன்பிடிக்க எமது எல்லைக்குள் வருவோம் என இந்திய மீனவர்கள் விடுத்துள்ளது அடாவடி அதனை நாம் அனுமதிக்க முடியாது.


0/Post a Comment/Comments

Previous Post Next Post