காரைநகரில் காணி சுவீகரிப்பிற்கு எதிராக போரட்டம் - Yarl Voice காரைநகரில் காணி சுவீகரிப்பிற்கு எதிராக போரட்டம் - Yarl Voice

காரைநகரில் காணி சுவீகரிப்பிற்கு எதிராக போரட்டம்
யாழ்.காரைநகர் இந்துகல்லூரிக்கு சொந்தமான 2 பரப்பு காணி மற்றும் பொதுமக்களுக்கு சொந்தமான 6 பரப்பு காணி உட்பட 8 பரப்பு காணியை கடற்படையின் எலாற கடற்படை முகாம் அமைப்பதற்காக சுவீகரிக்கும் முயற்சி நிறுத்தப்பட்டுள்ளது. 

நில அளவை திணைக்களத்தினால் கடற்படையின் தேவைக்காக குறித்த காணியை அளவீடு செய்வதற்கு இன்று காலை முயற்சிக்கப்பட்ட நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள், பொது அமைப்புகளின் தலைவர்கள் இணைந்து, 

கடுமையான எதிர்ப்பை வெளியிட்டதுடன், பிரதேச செயலருடன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேரடியாக சந்தித்து பேச்சு நடத்தியிருந்தனர். இதனடிப்படையில் காணி அளவீடு நிறுத்தப்பட்டிருக்கின்றது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post