யாழ். பல்கலைக்குப் பி. சி. ஆர் இயந்திரம் கையளிப்பதற்காக யாழ். வரும் அமெரிக்கத் தூதுவர்! - Yarl Voice யாழ். பல்கலைக்குப் பி. சி. ஆர் இயந்திரம் கையளிப்பதற்காக யாழ். வரும் அமெரிக்கத் தூதுவர்! - Yarl Voice

யாழ். பல்கலைக்குப் பி. சி. ஆர் இயந்திரம் கையளிப்பதற்காக யாழ். வரும் அமெரிக்கத் தூதுவர்!




யாழ்ப்பாணப்
 பல்கலைக் கழக மருத்துவ பீடத்தில் அமைந்துள்ள பிசிஆர் பரிசோதனை ஆய்வுகூடத்துக்கு யுஎஸ்எயிட் இனால் அன்பளிப்புச் செய்யப்பட்ட பிசிஆர் இயந்திரத்தைச் சம்பிரதாய பூர்வமாகக் கையளிக்கும் நிகழ்வு எதிர்வரும் 23 ஆம் திகதிசெவ்வாய்க் கிழமை பிற்பகல் 4.30 மணிக்கு இடம்பெறவுள்ளது

யாழ்பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சிசிறிசற்குணராஜா தலைமையில் இடம்பெறவுள்ள ந்த நிகழ்வில் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலைனா பி ரெப்லிற்ஸ் அம்மையார் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டுயாழ்பல்கலைக்கழக  மருத்துவ பீடாதிபதி வைத்திய நிபுணர்பேராசிரியர் எஸ்ரவிராஜிடம் பிசிஆர் இயந்திரத்தைச் சம்பிரதாய பூர்வமாகக் கையளிக்கவுள்ளார்

நிகழ்வில்வடக்கு மாகாண ஆளுநர் திருமதி பிஎஸ்எம்சார்ள்ஸ்வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் கேதிஸ்வரன்யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பதில் பணிப்பாளர் வைத்தியர் எஸ்ஶ்ரீபவானந்தராஜா ஆகியோர் விருந்தினர்களாகக் லந்துகொள்ளவுள்ளனர்

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் ஆரம்பித்த காலத்தில் வடக்கில் கொரோனாத் தொற்றாளர்களை அடையாளம் காண்பதற்கான வசதிகள் இல்லாத நிலையில்இங்கிருந்து சேகரிக்கப்படும் மாதிரிகளை அனுராதபுரம் மற்றும் தென்னிலங்கையில் அமைந்திருக்கும் பிசிஆர் பரிசோதனை ஆய்வு கூடங்களுக்கு அனுப்பி முடிவுகளைப் பெற வேண்டி இருந்ததுஇதனால் முடிவுகளைப் பெறுவதில் பெரும் அசௌகரியங்கள் காணப்பட்டதுடன்தாமதமும் ஏற்பட்டது.

இந்நிலையில்யாழ்பல்கலைக்கழக மருத்துவ பீடம் தன்னிடமிருந்த ஒரேயொரு பிசிஆர்  இயந்திரத்தைக்  கொண்டுகடந்த வருடம் ஏப்ரல் மாதமளவில்பிசிஆர் பரிசோதனைகளை மேற்கொள்ள ஆரம்பித்ததுஇதனால் வடக்கில் பெறப்பட்ட மாதிரிகளை இங்கேயே பரிசோதித்துமுடிவுகளை விரைவாகப் பெற்றுக் கொள்ள முடிந்ததுஇதன் பின்னரே யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பிசிஆர் பரிசோதனை ஆய்வு கூட வசதிகள் ஏற்படுத்தப்பட்டன

தற்போது யாழ்பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் உள்ள இரண்டு பிசிஆர்  இயந்திரங்களைக்  கொண்டு நாளொன்றுக்கு சராசரியாக 300 மாதிரிகளைப் பரிசோதிக்கக் கூடிய வசதிகள் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.


0/Post a Comment/Comments

Previous Post Next Post