இலங்கையில் மோசமடைந்து வரும் மனித உரிமை நிலவரம் குறித்து கனடா கவலை – ஜெனீவா அமர்வில் கனடா வெளிவிவகார அமைச்சர் - Yarl Voice இலங்கையில் மோசமடைந்து வரும் மனித உரிமை நிலவரம் குறித்து கனடா கவலை – ஜெனீவா அமர்வில் கனடா வெளிவிவகார அமைச்சர் - Yarl Voice

இலங்கையில் மோசமடைந்து வரும் மனித உரிமை நிலவரம் குறித்து கனடா கவலை – ஜெனீவா அமர்வில் கனடா வெளிவிவகார அமைச்சர்இலங்கையில் மோசமடைந்து வரும் மனித உரிமை நிலவரம் குறித்து ஆழ்ந்த கவலை வெளியிட்டுள்ள கனடாவின் வெளிவிவகார அமைச்சர் மார்க் கானோ  இலங்கை இழைத்த குற்றங்களிற்காக இலங்கையை பொறுப்புக் கூறச்செய்வதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளார்.

மனிதஉரிமை பாதுகாவலர்களுக்கான சிவில் அமைப்புகளிற்கான அச்சுறுத்தல்கள் நினைவுகூறுதலை ஒடுக்குதல் மதசிறுபான்மையினரின் உடல்களை கட்டாயப்படுத்தி தகனம் செய்தல் சட்டத்தின் ஆட்சியில் வீழ்ச்சி ஆகிய உட்பட இலங்கையின் மனித உரிமை நிலவரம் மோசமடைந்து வருவது குறித்து கனடா ஆழ்ந்த கவலை கொண்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளரின் சமீபத்தைய அறிக்கை இலங்கையில் இழைக்கப்பட்ட குற்றங்களிற்கு பொறுப்புக்கூறவேண்டியதன் அவசியத்தை சுட்டிக்காட்டியுள்ளது என தெரிவித்துள்ள கனடாவின்; வெளிவிவகார அமைச்சர் கனடா பொறுப்புக்கூறல் நல்லிணக சமாதான நடவடிக்கைகளிற்கு தொடர்ந்தும் ஆதரவளிக்கும் என தெரிவித்துள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post