யாழ் பாடசாலைகளிலும் கல்லூரிகளிலும் எழுத, வாசிக்க தெரியாத மாணவர்கள்!!! - Yarl Voice யாழ் பாடசாலைகளிலும் கல்லூரிகளிலும் எழுத, வாசிக்க தெரியாத மாணவர்கள்!!! - Yarl Voice

யாழ் பாடசாலைகளிலும் கல்லூரிகளிலும் எழுத, வாசிக்க தெரியாத மாணவர்கள்!!!




யாழ்.மாவட்டத்திலுள்ள பல பாடசாலைகளிலும் கல்லூரிகளிலும் தரம் 11 இல் கூட எழுத வாசிக்க தெரியாத மாணவர்கள் இருக்கின்றனர் என்ற வேதனையா செய்தி எத்தனை பேருக்கு தெரியும்?  இதற்கு பொறுப்புக் கூறவேண்டியவர்கள் யாவர்? 

கல்லூரிகள், அவர்கள் கற்ற ஆரம்பப் பாடசாலைகள் மீதும், அப்பாடசாலைகள் மாணவர்களின் பெற்றோர்கள் மீதும் குற்றஞ்சாட்டுகின்றனர். 

தரம் 11 வரை ஒரு மாணவன் எழுத வாசிக்கத் தெரியாமல் இருப்பானாயின் தனியே பெற்றோர்கள் மீது குற்றஞ்சாட்டை முன்வைக்க முடியாது. இதற்கான பொறுப்பை அனைவரும் ஏற்கவேண்டும். 

11 வருடங்கள் படித்த ஒருவன் பாடசாலையை விட்டு வெளியேறும்போது தனது சொந்த மொழியில் எழுத, வாசிக்க தெரியாதவனாக இருப்பானாயின் அதிபர், ஆசரியர்கள், கோட்டக்கல்வி, வலயக் கல்வி அதிகாரிகள் என்ன செய்தார்கள் என்ற கேள்வி எழுவுதும் இயல்பானது. 

ஒவ்வொரு பாடங்களுக்கும் ஆசிரிய ஆலோசகர்கள் இருக்கின்றனர். அவர்கள் பாடசாலைகளுக்கு அடிக்கடி கள விஜயம் மேற்கொள்கின்றனர். ஆனாலும் மாணவர்கள் எழுத வாசிக்கத் தெரியாமல் இருக்கின்றனர் எனில் கல்விச் சமூகத்திற்கு பெரும் இழுக்காகும். 

கல்வியியலாளர்கள் தயவுசெய்து இந்த விடயத்தில் அக்கறை செலுத்தவேண்டும். கல்விக் கொள்கையில் மாற்றம் கொண்டுவரப்படவேண்டும்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post