பொத்துவில் - பொலிகண்டி வரையிலான இறுதிநாள் போராட்டத்திற்கு அணிதிரளுங்கள் - யாழ் மாநகர துணை மேயர் ஈசன் அழைப்பு - Yarl Voice பொத்துவில் - பொலிகண்டி வரையிலான இறுதிநாள் போராட்டத்திற்கு அணிதிரளுங்கள் - யாழ் மாநகர துணை மேயர் ஈசன் அழைப்பு - Yarl Voice

பொத்துவில் - பொலிகண்டி வரையிலான இறுதிநாள் போராட்டத்திற்கு அணிதிரளுங்கள் - யாழ் மாநகர துணை மேயர் ஈசன் அழைப்பு
 நீதிக்கான போராட்டத்திற்கு அணிதிரள  யாழ் மக்களுக்கு  யாழ் மாநகர துணை முதல்வர்  ஈசன் அழைப்பு விடுத்துள்ளார் அவர் மேலும் தெரிவித்ததாவது

தமிழ் பேசும் மக்களின் வாழும் உரிமையை உறுதி செய்யும் வகையில் நீதிகோரி பொத்துவிலில் ஆரம்பித்து வடக்கு கிழக்கு சிவில் அமைப்பினரால் முன்னெடுத்துவரும் மக்கள் எழுச்சிப் பேரணி நாளை யாழ்ப்பாண  எல்லையை தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது  

வடக்கு-கிழக்கு தமிழர் தாயகத்தின் உயிர்நாடி வழியே உரிமைக்கு வழிசமைத்து முன்னெடுக்கப்பட்டு வரும் குறித்த பேரணியை வரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ்ப்பாணத்தில்  வரவேற்க அணி திரண்டு வாருங்கள்.

இது கட்சி, அரசியல் கடந்த இனத்திற்கான அழைப்பு.

எமது உணர்வு! எமது உரிமை! என்ற பொதுமை அடையாளத்தில் தமிழர்களாய் அணிதிரள்வோம் 

யாழ்ப்பாணத்தில் உள்ள விளையாட்டுக் கழகங்கள், இளையோர் அமைப்புகள் மற்றும் ஆர்வலர்கள் நாளை ஞாயிற்றுக் கிழமைஒன்றிணைய ஆயத்தமாகுங்கள்.

குறித்த வழித்தடத்தில் உள்ள ஆர்வலர்களும் நீதிக்கான பேரணியை வரவேற்கவும், அணி சேர்ந்து பலம் சேர்க்கவும் முன்வருமாறு கேட்டுக்கொள்கிறேன்  

எமது உணர்வு! எமது உரிமை!
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை இணைவோம் தமிழர்களாய்! என யாழ் மாநகர துணை முதல்வர் ஈசன் தெரிவித்துள்ளார்

0/Post a Comment/Comments

Previous Post Next Post