பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி போராட்டத்தை சில்லறை விடயங்களிற்காக திசைமாற்ற முடியாது -அருட்தந்தை லியோ ஆம்ஸ்ரோங் - Yarl Voice பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி போராட்டத்தை சில்லறை விடயங்களிற்காக திசைமாற்ற முடியாது -அருட்தந்தை லியோ ஆம்ஸ்ரோங் - Yarl Voice

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி போராட்டத்தை சில்லறை விடயங்களிற்காக திசைமாற்ற முடியாது -அருட்தந்தை லியோ ஆம்ஸ்ரோங்பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி போராட்டத்தை சில்லறை விடயங்களிற்காக திசைமாற்ற முடியாது என அருட்தந்தை லியோ ஆம்ஸ்ரோங் தெரிவித்துள்ளார்.

இன்றையதினம் யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அருட்தந்தை லியோ ஆம்ஸ்ரோங் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்..

இது தனிநபர்களின் போராட்டமல்ல இதற்கு யாரும் உரிமை கோர முடியாது. இது மக்களின் எழுச்சி, மக்களின் ஒற்றுமையை வெளிப்படுத்தியுள்ள போராட்டம். சில்லறை விடயங்களிற்காக அதை திசைமாற்ற முடியாது.

அதில் அணிதிரண்ட இளைஞர்களிற்கு சரியான வழிகாட்ட வேண்டிய பொறுப்பு அரசியல் கட்சிகள் மத தலைவர்கள் மற்றும் சிவில் சமூகத்திற்கு உள்ளது என தெரிவித்துள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post